அஜித் குமார்


நடிகர் அஜித் குமார் தற்போது குட் பேட் அக்லி படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்கு தயாராகி வருகிறார். அஜித் நடித்துள்ள மற்றொரு படமான விடாமுயற்சி வரும் தீபாவளியை முன்னிட்டு வெளியாக இருந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப் பட்டுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டும் .


பொது இடங்களில் அவ்வப்போது அஜித் தனது ரசிகர்களுடன் செல்ஃபீ எடுத்துக்கொள்வது . தனது குடும்பத்துடன் நேரம் செலவிடுவது , அதிநவீன ஸ்போர்ட்ஸ் கார்களுடன் புகைப்படம் பதிவிடுவது என தனிப்பட்ட வாழ்க்கையிலும் படு பிஸியாக இருந்து வருகிறார் அஜித். 


சந்தோஷ் நாராயணனிடம் மன்னிப்பு கேட்ட அஜித்


அஜித்திடம் அனைவரும் ரசிக்கும் ஒரு பண்பு தன் எதிரில் இருப்பவரை பெரியவர் சிறியவர் என்று இல்லாமல் அவரிடம் சக மனிதராக உரையாடுவது. செல்ஃபீ எடுத்துக்கொள்ள வரும் ரசிகர் என்றாலும் அவருடன் அமைதியாக உரையாடக்கூடியவர். இசையமைபபாளர் சந்தோஷ் நாராயணன் சமீபத்தில் தனக்கும் அஜித்திற்கும் இடையில் நிகழ்ந்த சம்பவம் ஒன்றை பகிர்ந்துகொண்டுள்ளார்.


”ஒரு முறை அஜித் சாரை விமான நிலையத்தில் சந்தித்தேன். நான் யார் என்று தெரியாமலே என்னிடம் ஐந்து நிமிடம் பேசினார். பொதுவாக நான் யாரென்று சொல்லிக்கொள்ளும் பழக்கம் எனக்கு கிடையாது. அவருக்கும் என்னைப் பற்றி தெரியாததால் அவர் நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்று கேட்டார். நான் மியூசிக் செய்துகொண்டிருப்பதாக சொன்னேன். அதை கேட்டு சீக்கிரமே நீங்கள் நல்லா வருவீங்க  என்று சொன்னார். எனக்கு எப்படி என் பெயர் நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என் சொல்லத் தேவையில்லையோ அதேபோல் அவருக்கு நான் யார் என்பதை தெரிந்து கொள்ள அவசியம் இல்லை. நாங்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்த போது என் மனைவி மீனாட்சி அங்கு வந்து என்னைப் பற்றி அவரிடம் சொன்னார். இதை கேட்டு அஜித் என்னை தனியாக அழைத்துச் சென்று “ ரொம்ப சாரி சார்” என்று மன்னிப்புக் கேட்டார்” என சந்தோஷ்  நாராயணன் தெரிவித்துள்ளார். 


பெரிய ஸ்டார்கள் இருக்கும் பிஸியில் அவர்கள் துறையில் இருப்பவர்களையே சில நேரங்களில் கவனிக்க முடியாமல் போவது இயல்பே. தமிழ் நாட்டில் புகழ்பெற்ற இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணனை அடையாளம் தெரியாமல் அஜித் அவரை ஒரு சாமானியனாக மதித்து உரையாடியதும் . அவரைப் பற்றி தெரிந்த போது அந்த நிகழ்வை அவமானமாக பார்க்காமல் மனம் திறந்து மன்னிப்புக் கேட்டதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது