தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் அதிகம் விரும்பப்படும் ஷோக்களில் முதல் வரிசையில் இருக்கும் ஷோ என்றால் அது விஜய் டீவியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சி குறித்தும் தனது அபிமான போட்டியாளர் குறித்தும் தினமும் பேச்சுகள் அடிபடாத வீடுகள், அலுவலகங்கள் இல்லை என்று கூறும் அளவிற்கு மிகவும் பரபரப்பாக சென்று கொண்டு உள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதலில் வெளியேற்றப்பட்ட இரண்டு போட்டியாளர்கள் தற்போது மீண்டும் வீட்டிற்குள் சென்றுள்ளனர். இது போட்டியை இன்னும் சூடுபடுத்தியுள்ளது.
போட்டியாளர்களில் ஒருவரான சின்னத்திரை நடிகர் விஷ்ணு கடந்த இரண்டு வாரங்களாக நாமினேசனில் இருந்து தப்பித்து வரும் நிலையில், தற்போது மிகவும் அதிகமாகவே கோபப்பட்டு வருகின்றார். வழக்கமாக அவ்வப்போது கோபப்பட்டு வரும் விஷ்ணு கடந்த இரண்டு வாரமாகவே அதிகம் கோபப்பட்டு வருகின்றார். ஆனால் இதில் கேள்விக்கு உள்ளாகும் விஷயம் என்றால் அது வைல்ட் கார்டு எண்ட்ரி மூலம் உள்ளே நுழைந்த அர்ச்சனாவை குறிவைத்து வருகின்றார். தொடக்கம் முதல் பிரச்னைகளை உருவாக்கி சண்டையிட்டு வந்த மாயா மற்றும் பூர்ணிமா கூட்டணிகள் தற்போது அமைதியாக இருந்து வருகின்றனர். இதனால் வீட்டில் ஏற்பட்டுள்ள கண்டெண்ட் குறைபாட்டினை குறைக்க யோசித்தாரோ என்னவோ, அர்ச்சனாவை வேண்டும் என்றே வம்புக்கு (நவம்பர் 29 மற்றும் 30ஆம் தேதி எப்பிசோட்கள்) இழுத்து வருகின்றார். இதுவெல்லாம் ஒரு புறம் இருக்க அர்ச்சனாவும் ஏதாவது பேசுகையில் தனது தரப்பு வாதத்தை மிகவும் ஆக்ரோசமாக அல்லது எதிரில் உள்ளவரின் கருத்தைவிடவும் தனது வாதம்தான் சரி என்ற மனநிலையில் அணுகுவதால் அர்ச்சனாவுடன் பேசுவது என்றாலே ஹவுஸ்மேட்ஸ் யோசிக்கிறார்கள்.
இதற்கு முன்னர் பெரும்பாலும் விஷ்ணு என்றாலே கொஞ்சம் ரொமாண்டிக் பெர்சன் என யோசித்துக் கொண்டு இருந்த ரசிகர்களுக்கு விஷ்ணுவின் இந்தக் கோபம் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அர்ச்சனா விவகாரத்தில் விஷ்ணுவின் கோபம் ஒரு கட்டம் வரை சரியாக இருந்தது என பேசிக்கொண்டு இருந்த பிக்பாஸ் ரசிகர்கள் கூட, விஷ்ணு கொஞ்சம் ஓவரா போராறோ எனப் பேசவைத்துள்ளார்.
அர்ச்சனாவை ”மருத்துவரைப் பார்க்க போ, பெட்ஷிட்டை மூடிக்கொண்டு அழு, கர்ஃபர்ஷன் ரூமுக்கு போ” என்றெல்லாம் கோபத்தில் வார்த்தைகளை விட்டு வருகின்றார். ஆனால் இது குறித்து ஏற்கனவே வீக் எண்ட் எப்பிசோடில் கமல்ஹாசன் கண்டித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதற்கு முன்னர் அர்ச்சனா இவ்வாறு கார்னர் செய்யப்பட்டபோது விசித்ரா மட்டும் அவருக்கு ஆதரவாக இருந்தார். ஆனால் தற்போது அர்ச்சனாவே தன்னை கார்னர் செய்பவர்கள் மற்றும் தன்னை கார்னர் செய்கின்றார் என அவர் கருதும் நபரையும் தனியாகவே எதிர்கொள்கின்றார். இதனால் பிக்பாஸ் வீட்டில் போட்டி மற்றும் பரபரப்பும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு செல்கிறது.