விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடர் மூலம் அறிமுகமானவர் கார்த்திக் ராஜ். அதனையடுத்து‘ஆஃபீஸ்’ தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் பரிச்சயமானார்.


அதன் பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலில் நடித்தார். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இதன் மூலம் கார்த்திக் ராஜ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.


அனைத்தும் நல்லபடியாக போய்க்கொண்டிருந்த சூழலில் சில காரணங்களால் செம்பருத்தி தொடரிலிருந்து 2020ஆம் ஆண்டு விலகினார். இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், படத்தில் நடிப்பதற்காகவே கார்த்திக் சீரியலை விட்டு விலகினார் என சின்னத்திரையில் பேச்சு எழுந்தது.


நிலைமை இப்படி இருக்க சில மாதங்களுக்கு முன் வீடியோ ஒன்றை வெளியிட்ட கார்த்திக் ராஜ், தன்னை படங்களில் நடிக்க விடாமல் சிலர் தடுப்பதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.




அதுமட்டுமின்றி இந்தத் தடைகளை தகர்த்தெறிந்து தானே சொந்தமாக திரைப்படத்தை தயாரித்து வெளியிட உள்ளதாகவும் கூறினார். அதற்காக, ரசிகர்கள் தங்களால் முடிந்த நிதியுதவியை அளிக்குமாறு வேண்டுகோள் வைத்து, பணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரங்களையும் வெளியிட்டார். 


இதற்கிடையே சில மாதங்களுக்கு பின் மற்றொரு வீடியோ வெளியிட்ட அவர், இரண்டு கோடி ரூபாய்தேவைப்பட்டிருந்த சூழலில் சுமார் 7 முதல் 8 லட்சமே கிடைத்திருக்கிறது. என்னுடைய ரசிகர்கள் 1 லட்சம் பேர் 200 ரூபாய் அனுப்பினால்கூட தேவையான தொகை கிடைத்துவிடும். போதிய தொகை கிடைக்கவில்லை என்றால் இதுவரை வாங்கிய பணத்தை மீண்டும் அவர்களுக்கே திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளேன் என கூறியிருந்தார்.


 






இந்நிலையில், தனது படத்தின் படப்பிடிப்பை தொடங்கியிருப்பதாக கார்த்திக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,  “எங்கள் திரைப்படத்தின் முதல் ஷெட்யூலைத் தொடங்கிவிட்டோம் என்பதை பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் அன்பும் ஆதரவும் இல்லாமல் இது சாத்தியமில்லை” என பதிவிட்டு படத்தின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண