முகத்துக்கு எத்தனை மேக்கப் போட்டுக் கொண்டாலும் அந்த உதட்டோரம் கொஞ்சம் லிப் ஸ்டிக் போடாவிட்டால் ஏதோ ஒப்பனை முழுமை பெறாதது போல் ஒரு அதிருப்தி வரும்.
பெண்களின் இந்த லிப்ஸ்டிக் ஆசையைக் கருத்தில் கொண்டே, பல நூறு வண்ணங்களிலும், மேட் ஃபினிஷ், டல் ஃபினிஷ், லாங் லாஸ்டிங், க்ளாஸ் எனப் பல வகைகளில் லிப்ஸ்டிக் மார்க்கெட்டில் உலா வருகின்றன. ஆனாலும் லிப்ஸ்டிக்கிலேயே மாய்ஸ்சரைஸரும் சேர்ந்திருந்தால் எப்படி இருக்கும். அப்படியும் லிப்ஸ்டிக்குகள் நிறைய இருக்கின்றன. இந்த குளிர் காலத்தில் உங்கள் உதடுகள் வறண்டு போகாமல், வெடிப்புகள் காணாமல் அழகாக இருக்க சில லிப்ஸ்டிக்குகளைப் பரிந்துரைக்கிறோம்.
1. மேகிளாம் LIT க்ரீமி மேட் லிப்ஸ்டிக்
MyGlamm LIT Creamy Matte Lipstick. இந்த லிப்ஸ்டிக்கின் தனித்தன்மையே இது வளவளப்பாக இருந்தாலும் பிசுபிசுப்பாக இருப்பதில்லை. அழகான நேர்த்தியான ஃபினிஷ் தருகிறது. மேட் லுக்கும் தருகிறது. மேலும் இந்த லிப்ஸ்டிக் க்ரூயல்டி ஃப்ரீ அதாவது மிருகக் கொழுப்பு என ஏதும் இதில் இல்லை. சுத்த சைவம் என்றழைக்கப்படும் வேகன் வகையறாவைச் சேர்ந்தது.
MyGlamm LIT Creamy Matte Lipstick (Pink Daiquiri), 4.54 கிராம் லிப்ஸ்டிக்- பீட்டாவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.595. ஆனால் அமேசானில் ஆஃபரில் வெறும் ரூ.446க்கு கிடைக்கிறது.
2. மேபெளின் நியூயார்க் கலர் சென்சேஷனல் க்ரீமி மேட் லிப்ஸ்டிக்
இந்த லிப்ஸ்டிக்கில் வெல்வெட்டி மேட் க்ரீம் உள்ளது. அதனால் லிப்ஸ்டிக் பூச்சுக்கு உடைந்து விரிசல் விழாத லுக் தருகிறது. மேலும் உங்கள் உதடுகளின் ஈரத்தன்மையைப் பாதுகாக்கிறது.
Maybelline New York Color Sensational Creamy Matte Lipstick, 695 Divine Wine, 3.9 கிராம். இதன் விலை ரூ.299. அமேசானில் ஆஃபரில் ரூ.269க்கு கிடைக்கிறது.
3. கிரோ லிவ் இன் க்ரீமி மேட் லிப்ஸ்டிக்
இந்த லிப்ஸ்டிக் லைவெயிட் டெக்ஸ்டர் கொண்டது. இதை பூசிக்கொள்வது மிகவும் எளிது. இதுவும் 100% வேகன் லிப்ஸ்டிக்.
Kiro Live-In Creamy Matte Lipstick - Gold Dust, Pink Ginger Gold Dust, 4.2 g. இதன் விலை ரூ.850. அமேசானில் கிடைக்கிறது. இது நான் ஸ்டிக்கி அதாவது ஒட்டாத வகையைச் சேர்ந்தது.
4. ஃபேசஸ் கனடா ஹெச்டி இன்டன்ஸ் மேட் லிப்ஸ்டிக்
Faces Canada HD Intense Matte Lipstick, இது பட்டுப்போன்ற பளபளப்பைத் தரும். மேட் ஃபினிஷ் கொண்டது. நீண்ட நேரம் அழியாமல் இருக்கக் கூடியது.
Faces Canada HD Intense Matte Lipstick, Feather light comfort, 10 hrs stay, Primer infused, Flawless HD finish, Peach Lip Color, Tempting , 1.4 gm. இந்த லிப்ஸ்டிக்கை அமேசானில் ரூ.799க்கு வாங்கலாம். நாள் முழுவதும் அழியாமல் இருப்பதோடு நாள் முழுவதும் உதட்டுக்கு ஈரப்பதத்தையும் கொடுத்து அதனைப் பாதுகாக்கும்.
5. ரெவ்லான் சூப்பர் லஸ்ட்ரஸ் லிப்ஸ்டிக்.
Revlon Super Lustrous Lipstick. பெயருக்கு ஏற்றது போலவே, இந்த லிப்ஸ்டிக் மிகவும் பளபளப்பானது. இது ஸ்மூத் ஃபினிஷுடன், உதடுகளை மென்மையானதாக வைத்துக் கொள்கிறது. இதில் வைட்டமின் இ மற்றும் அவகேடோ எண்ணெய் இருக்கிறது. இந்த லிப்ஸ்டிக் அமேசானில் 15% ஆஃபரில் ரூ.590க்கு கிடைக்கிறது.