எந்த வாட்டர் ஃபில்டரை தேர்வு செய்வது எனக் குழப்பமா? : இதோ சில சாய்ஸ்!

காய்ச்சிக் குடிப்பது அல்லது ஃபில்டர் செய்து குடிப்பது என பல்வேறு வகையில் குடிநீரை சுத்தப்படுத்தி அருந்தச் சொல்லி நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

Continues below advertisement

வெயில்காலத்தில் நீர் அதிகமாகக் குடிக்க வேண்டும் என்பார்கள். அதையே மழைக்காலத்தில் பார்த்துப் பார்த்துக் நீரைக் குடிக்கவேண்டும் என்பார்கள். நீரில் கொசுக்கள் தேங்குவது, மழைநீர் குடிநீரில் கலப்பதால் மணல் சேர்வது அழுக்குபடிவது என நீர் மனிதர்கள் உபயோகிக்கும் வகையில் இருக்காது. காய்ச்சிக் குடிப்பது அல்லது ஃபில்டர் செய்து குடிப்பது என பல்வேறு வகையில் குடிநீரை சுத்தப்படுத்தி அருந்தச் சொல்லி நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். ஃபில்டர் செய்து குடிக்க என்னென்ன வாட்டர் ஃபில்டர்களை வாங்கலாம், எது சிறந்த வகையில் குடிநீரை சுத்தம் செய்துதரும் எனக் குழப்பத்தில் இருக்கிறீர்களா? உங்களுக்காகச் சில சிறந்த வாட்டர் ஃபில்டர்களை பரிந்துரைக்கிறார்கள் நிபுணர்கள். 

Continues below advertisement

லிவ்ப்யூர் ஜிங்கர்  வாட்டர் பியூரிஃப்யர்

மெல்லிய வடிவமைப்பில் வரும் இந்த வகை நீர்வடிகட்டிகள் சிவப்பு மற்றும் கருப்பு நிற பாடிலைனுடன் உருவாக்கப்பட்டுள்ளது. உள்ளே கார்பன் ப்ளாக் ஃபில்டர்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. இதனால் தேவையற்ற மாசு வடிகட்டப்பட்டு அருந்தும் வகையில் குடிநீராக மாற்றப்படுகிறது. கிட்டத்தட்ட 70 சதவிகிதம் வரை நீரை வடிகட்டுகிறது. வருடாந்திரமாக 20000 லிட்டர் நீர் இதில் சேமிக்கலாம். ஆறு அடுக்கு வடிகட்டும் திறன் இந்த ஃபில்டரில் இருப்பதால் நீரை குடிப்பதற்குத் தகுந்ததாக இது மாற்றுகிறது.

தண்ணீரில் தேவையான மினரல்களை இது சேர்ப்பதால் சுவையான ஆரோக்கியமான குடிநீரை இது வழங்குகிறது. போர்வெல் பம்பு நீர், டாங்க் நீர் மற்றும் குழாய் நீர் உட்பட பல நீர்வகைகளை ஃபில்டர் செய்ய இது உதவுகிறது.

அக்வா லிப்ரா வித் டிவைஸ் வாட்டர் பியூரிஃப்யர்

முழுவதும் ட்ராண்ஸ்பரண்டான உடலமைப்பைக் கொண்டு இந்த வாட்டர் ப்யூரிஃப்யர் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் வடிகட்டும் அமைப்பு உள்ளது. முழுவதும் அடோமேட்டிக்காக ஃபில்டர் செய்வது, மணல்கற்கள் கொண்டு ஃபில்டர் செய்வது கார்பன் கொண்டு ஃபில்டர் செய்வது என மூன்று அடுக்குகள் இதில் உள்ளன. இது தவிர 2000  பிபிஎம் கொண்ட ஆர்.ஓ ஷீட்டும் இதில் உள்ளது. அதில் யூ.எஃப் பில்டர், அல்கலைன் ஃபில்டர், காப்பர் எஃபக்ட், மற்றும் பாக்டீரியா  வைரஸ்களை செயலிழக்கச் செய்யும் யூவி டிஸ் இன்ஃப்க்டர் ஆகியன இதில் அடங்கும். 

ஹெச்.யூ.எல்.  ப்யூரிட் எக்கோ வாட்டர்

மேட் ப்ளாக் பாடிலைன் கொண்ட இந்த வாட்டர் ஃபில்டர்கள் 10 லிட்டர் கொள்ளளவுடன் வருகிறது. மெல்லிய டிசைன் கொண்டிருப்பதால் இது மேலும் ஸ்டைலிஷானதாக்குகிறது. 7 அடுக்கு ஃபில்டர் வசதியை இது கொண்டுள்ளது. தண்ணீரில் தேவையான மினரல்களை இது சேர்ப்பதால் சுவையான ஆரோக்கியமான குடிநீரை இது வழங்குகிறது. போர்வெல் பம்பு நீர், டாங்க் நீர் மற்றும் குழாய் நீர் உட்பட பல நீர்வகைகளை ஃபில்டர் செய்ய இது உதவுகிறது.

 

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

Continues below advertisement
Sponsored Links by Taboola