இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷின் இரட்டை நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் நானே வருவேன். இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள "யாரும் இல்லா" பாடல் தான் இந்த படத்தில் தனக்கு மிகவும் பிடித்த பாடல் என்று படத்தின் இயக்குநர் செல்வராகவன் ட்வீட் செய்துள்ளார். பாடலைக் கொடுத்தமைக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவிற்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் ஆகிய படங்களை தொடர்ந்து செல்வராகவன் - தனுஷ் கூட்டணி 5வது முறையாக இணைந்துள்ள படம் “நானே வருவேன்”. இப்படம் செப்டம்பர் 29ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.
செல்வராகவன் ட்வீட்:
தனுஷ், செல்வராகவன், யுவன் காம்போ என்றுமே ஒரு அல்டிமேட்டான காம்போவாக தான் இருக்கும். அந்த வகையில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ள இந்த சைக்கோ த்ரில்லர் ஹாரர் படமும் சூப்பர் ஹிட் வெற்றி பெரும் என எதிர்பார்த்தனர் ரசிகர்கள். படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் இந்த நிலையில் இன்று, படத்தின் இயக்குநர் செல்வராகவன் இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
நானே வருவேன் படத்தின் "யாரும் இல்லா..." பாடல் தான் இந்த படத்தில் தனக்கு மிகவும் பிடித்த பாடல் என்று படத்தின் இயக்குநர் செல்வராகவன் ட்வீட் செய்துள்ளார். அந்த பாடலை தான் திரும்பத் திரும்ப கேட்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாடலைக் கொடுத்தமைக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவிற்கு நன்றி தெரிவித்து செல்வராகவன் ட்வீட் செய்துள்ளார்.
விவேக் எழுதிய இந்த பாடலின் வரிகளுக்கு குரல் கொடுத்துள்ளார் அந்தோணி தாசன். இந்த பாடலின் லிரிக் வீடியோ அக்டோபர் 1 அன்று வெளியானது. இப்பாடல் சமூக வலைத்தளங்களில் வெளியான சில மணி நேரங்களிலேயே ஏராளமான வியூஸ், லைக்ஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் படத்தில் பாடல்கள் அனைத்தும் அற்புதம்.