மயிலாடுதுறையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட சிறப்பு மாநாடு மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் பழ.வாஞ்சிநாதன், மாநில துணைத் தலைவர் சாமிநாதன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று பேசினர். அதனை தொடர்ந்து இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விபரம் பின்வருமாறு.




சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும், மாநிலம் முழுவதும் நிகழும் தீண்டாமைக் கொடுமைகளை தடுத்திட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், பஞ்சமி நிலங்களை மீட்டு நிலமற்ற தலித் மக்களுக்கு வழங்க வேண்டும், ஆதிதிராவிட நலத்துறை மூலம் வழங்கப்பட்ட அனைத்து வீட்டு மனைப்பட்டாக்களையும் வருவாய்த்துறை கணக்கில் ஏற்றிட வேண்டும், இருளர், பழங்குடி மக்களுக்கு குடிமனைப்பட்டா, சாதிச்சான்று வழங்க வேண்டும், உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலித் மக்கள் பிரதிநிதிகள் எந்த அச்சுறுத்தலுமின்றி நிர்வாகத்தை நடத்திட உத்திரவாதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.




மயிலாடுதுறை அருகே ஐவநல்லூர் கிராமத்தில் தாட்கோ மூலம் வங்கி கடன் தர மறுக்கும் பொதுத்துறை வங்கி மேலாளர்களை கண்டித்து தாய்மண் பால் உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் சங்கத்தினர் 3 வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தாலுக்கா ஐவநல்லூர் கிராமத்தில் ஆதிதிராவிட மக்கள் பொருளாதாரத்தை மேம்படுத்த தாட்கோ மூலம் வங்கி கடன் தர மறுக்கும் பொதுதுறை வங்கி மேலாளர்களை கண்டித்து அப்பகுதி மக்கள் தாய்மண் பால் உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் நலச்சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 3 வது வார்டு ஊராட்சி மன்ற உறுப்பினர் மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்று வரும் காத்திருப்பு போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல அமைப்புச் செயலாளர் வேலு.குணவேந்தன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். 




இதில்  ஆதிதிராவிட மக்களுக்கு தாட்கோ வழியாக வங்கி கடன் உடனடியாக அனைவருக்கும் வழங்க வேண்டும், தாட்கோ பயனாளிகள் தரும் திட்ட அறிக்கையின் படி கடன் வசதி வழங்கிட வேண்டுமென்று, 2 முறை நடைபெற்ற அமைதிப் பேச்சு வார்த்தையில் திட்ட அறிவிக்கைபடி வங்கி கடன் பரிந்துரைப்பதாக தெரிவித்துவிட்டு வங்கி கடன் பெற பரிந்துரைக்காததை  கண்டித்தும், தாட்கோ பயனாளிகள் தேர்வு செய்யும் ஒப்புதல் கடிதம் அன்றே வழங்க வேண்டும், தாட்கோ மானிய தொகையை தவறாக பயன்படுத்திய கூரைநாடு மற்றும் நீடூர் வங்கி மேலாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 




ஐயவநல்லூர் கிராமத்தில் உள்ள புறம்போக்கு மற்றும் கோயில் பகுதிகளில் வசித்து வரும் பொது மக்களுக்கு வீட்டு மனையோடு கூடிய பட்டா வழங்க வேண்டும் , பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் வீடுகள் கட்டிய பயனாளிகளுக்கு அரசு வழங்கும் தொகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த முன்வராததால் இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். போராட்டத்தை விட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.