சர்தார் படத்திற்காக நடிகர் கார்த்தி பாடிய “ஏறுமயிலேறி” பாடல் வெளியாகிவுள்ளது. நடிகர் கார்த்தி நடித்துள்ள சர்தார் படத்தில் இருந்து முக்கிய அப்டேட் ஒன்றை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் வெளியிட்டார்.





சர்தார் படத்தில் இடம்பெறும் ஏறுமயிலேறி என்னும் பாடலை நடிகர் கார்த்தி பாடியுள்ள  புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஜி.வி.பிரகாஷ்குமார் , “இப்பாடல் நாட்டுப்புற பாடல் என்றும், இதனை வந்தியத்தேவன் பாடுகிறார்” எனவும் தெரிவித்திருந்தார். 



இவர் கொடுத்த தகவலின் படி, சர்தார் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளாக கார்த்தி பாடிய “ஏறுமயிலேறி” என்ற பாடல் வெளியாகியுள்ளது. நடிகர் கார்த்தி பாடிய முதல் பாடல் இதுவே. இந்த பாடலை கேட்கும் போது வேறு ஒருவரின் குரலை கேட்பது போல் உள்ளது. நடிகர் கார்த்தி, அவரின் சொந்த குரலை மாற்றி வித்தியாசமாகவும் நாட்டு புற பாடலிற்கு ஏற்ற பாணியை உள்வாங்கி உற்சாகத்துடன் பாடியுள்ளார்.


இரும்புத்திரை, ஹீரோ ஆகிய படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சர்தார் படத்தில் கார்த்தி நடித்து வருகிறார். ஸ்பை திரில்லர் வகையில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் டீசர் கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி வெளியானது. தீபாவளிக்கு இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் கார்த்தி 6 கெட்டப்புகளில் நடித்துள்ளார்.


முன்னதாக, ஆகஸ்ட் மாதம் ‘விருமன்’ படம் வெளியானது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவின் 50 வருட கனவுப்படமான பொன்னியின் செல்வன் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியானது. இதில் வந்தியத்தேவன் என்னும் கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்திருந்தார். முதல் பாகத்தில் பொன்னியின் செல்வனின் மொத்த கதையும் கார்த்தி வழியாக ரசிகர்களுக்கு கடத்தப்பட்டிருந்தால் அவரின் நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றது. 


மேலும் படிக்க : Bigg Boss Season 6 Promo : ஜி.பி முத்துவை வம்பிழுக்கும் பிக்பாஸ் போட்டியாளர்கள்.. ராபர்ட் செய்தது சரியா தவறா?


Bigg Boss 6 Tamil Contestants: பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு விண்ணப்பித்த 20 ஆயிரம் பொதுமக்கள்...தேர்வு செய்யப்பட்ட 2 பேர் இவர்கள் தான்..!