Bakasuran Second Single: மன்சூர் அலிகானின் லோக்கல் டான்ஸ்.. வெளியானது பகாசூரனின் 2 ஆவது சிங்கிள்.. எப்படி இருக்கு பாட்டு? - வீடியோ!
’பகாசூரன்’ படத்தில் இருந்து இராண்டாவது சிங்கிள் பாடலான ‘காத்தம்மா’ பாடல் வெளியாகி இருக்கிறது.

’பகாசூரன்’ படத்தில் இருந்து இராண்டாவது சிங்கிள் பாடலான ‘காத்தம்மா’ பாடல் வெளியாகி இருக்கிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். 'பீஸ்ட்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த செல்வராகவன் ‘சாணிக்காயிதம்’ படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்த நிலையில், இயக்குனர் மோகன்ஜி இயக்கத்தில் செல்வராகவன் 'பகாசூரன்' படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டார்.
Just In




அதனைத்தொடர்ந்து படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. டீசர் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், படத்தில் இருந்து பாடல் ஒன்று வெளியிடப்பட இருக்கிறது என்ற அறிவிப்பை இயக்குனர் மோகன்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அதனைத்தொடர்ந்து ‘பகாசூரன்’ படத்தில் இருந்து முதல் பாடலாக ‘சிவ சிவாயம்’ வெளியாகி வரவேற்பை பெற்றது.
அதனைத்தொடர்ந்து படத்தில் இருந்து இரண்டாவது பாடலாக 'காத்தம்மா' பாடல் இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது காத்தம்மா பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
குத்துப்பாடலாக வெளியாகியிருக்கும் இந்தப்பாடலில் பிரபல நடிகரான மன்சூர் அலிகான் நடனம் ஆடியிருக்கிறார். செல்வராகவனின் இயக்கத்தில் இறுதியாக ‘நானே வருவேன்’ படம் வெளியானது.
கலவையான விமர்சனங்களை பெற்ற நானே வருவேன் படம் ரூபாய் 30 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக திரைவட்டாரத்தில் பேசப்படுகிறது.