பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழகத்தில் 200 கோடியை எட்டிய இராண்டாவது படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. 


பிரபல இயக்குனர் மணிரத்னமின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படம் வெளியாவதற்கு முன்பாகவே, முன்பதிவில் கிட்டத்தட்ட 17 கோடி வரை டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது. உலகம் முழுதும் வெளியான இத்திரைப்படத்தை, சினிமா ரசிகர்கள் மட்டுமன்றி அனைத்து தரப்பு மக்களும் திருவிழா போல கொண்டாடினர். 5,500 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான இந்தப்படம் இந்த ஆண்டு வெளியான விக்ரம் உட்பட அனைத்து தமிழ் படங்களிலும் வசூலை முறியடித்து சாதனை படைத்து இருக்கிறது. 


 






முன்னதாக பொன்னியின் செல்வன் படம், வெளியான ஒரே வாரத்தில் 100 கோடி வசூலைத் தாண்டி சாதனைப் படைத்தது. இதையடுத்து, படத்தின் வசூல் குறித்த தரவுகளை லைகா நிறுவனம் தொடர்ந்து வெளியிட்டு வந்தது. அதன்படி, திரைப்படம் வெளியான அன்றைய தினம் 80 கோடி வசூல் செய்ததாகவும், தமிழகத்தில் மிக விரைவாக 100 கோடியை எட்டிய படமாக மாறியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து 300 கோடி வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், அண்மையில் படம் 400 கோடி எட்டியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.


தற்போது படம் வெளியாகி 17 நாட்கள் கழிந்துள்ள நிலையில், படத்தின் வசூல் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த தகவல்களின்படி, தமிழ்நாடு அளவில் பொன்னியின் செல்வன் 200 கோடி வசூல் செய்துள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படி பார்க்கும் போது தமிழ்நாட்டில் 200 கோடி வசூலித்த முதல் தமிழ்படமாக பொன்னியின் செல்வன் மாறியிருக்கிறது 


உலக அளவில் பார்க்கும் போது, பொன்னியின் செல்வன் திரைப்படம் 17 நாட்கள் முடிவில் தோராயமாக 450 கோடியை தாண்டி 460 கோடியை நெருங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த செய்தியின் படி பார்க்கும் போது பொன்னியின் செல்வன் திரைப்படம் கமல்ஹாசனின் நடித்த விக்ரம் படத்திற்கு அடுத்தபடியாக  450 கோடியை தாண்டியிருக்கிறது. அடுத்தபடியாக பொன்னியின் செல்வன் படத்திற்கு போட்டியாக இருப்பது ரஜினிகாந்த் நடித்த 2.O படத்தின் வசூல். பொன்னியின் செல்வன் படத்தின் டிக்கெட் புக்கிங் நல்ல நிலையில் இருப்பதால், படம் 500 கோடியை தாண்டும் என்று சொல்லப்படுகிறது.