செல்வராகவன், தனுஷ் கூட்டணி என்றாலே எதிர்பார்ப்பு எகிறிவிடும். அப்படித்தான் நானே வருவேன் படத்திற்குமான எதிர்பார்ப்பும் செல்வா ரசிகர்கள் மத்தியிலும் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக இருக்கிறது.


ஏற்கெனவே இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதமே தொடங்குவதாக இருந்தது. ஆனால், அப்போது திட்டமிட்டபடி தொடங்கப்படவில்லை. செல்வராகவன் பீஸ்ட் படப்பிடிப்புக்கு கால் ஷீட் கொடுத்திருந்ததால் நானே வருவேன் சூட்டிங் தள்ளிப்போனது. இந்நிலையில், நாளை மறுநாள் அக்டோபர் 16ஆம் தேதி நானே வருவேன் படப்பிடிப்பு நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இந்தப் படத்தில், தனுஷ் ஹீரோவாக நடிக்க செல்வராகவன் இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.


காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன படங்களில் தனுஷ் செல்வா கூட்டணியின் சக்சஸ் ஃபார்முலா அனைவரும் அறிந்ததே.


இப்போது நானே வருவேன் படப்பிடிப்பு வரும் அக்.16ல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நானே வருவேன் என்ற பெயரும் மாற்றப்படவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.




தனுஷுக்கு இரட்டை வேடமா?


தனுஷ் இந்தப் படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. முதலில் இத்திரைப்படம் த்ரில்லர் ஜானர் என்று சொல்லப்பட்டது. ஆனால், அதில் தயாரிப்பாளர் தாணுவுக்கு துளியும் விருப்பமில்லையாம். அதனால் ஸ்க்ரிப்படை மாற்றி டான் திரைப்படமாக மாற்றி வருகிறாராம் செல்வராகவன். அதனாலேயே ஆகஸ்ட் மாதம் திட்டமிட்டபடி தொடங்கவில்லை என்றும் அக்டோபர் மாதத்தில் தொடங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இப்போது ரீரைட் செய்யப்பட்டுள்ள ஸ்க்ரிப்டின்படி கதை ராயபுரத்தில் நடக்கிறது. இரண்டு சகோதரர்களைப் பற்றியது. படத்திற்கு ராயன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. ராயன் பெயர் மாற்றம் குறித்தும் விரைவில் அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


புதுப்பேட்டை படத்தை யாரும் மறந்திருக்க முடியாது.  தனுஷ் நடிப்பிலும் சரி, ஆக்‌ஷனிலும் சரி மாஸ் காட்டிய படம், புதுப்பேட்டை. செல்வராகவான் தனுஷ் கூட்டணி மீது தயாரிப்பாளர்களுக்கு பெரும் நம்பிக்கையைக் கொடுத்தது. தாணுவும் புதுப்பேட்டை ஃபார்முலாவில் ஒரு படம் பண்ணச் சொல்லிக் கேட்பது நியாயம் தானே. ராயனை வரவேற்கத் தயாராவோம்.


புதுப்பேட்டை மாதிரி இன்னொரு படம் என்றால் ரசிகர்களுக்கு கசக்கவா செய்யும்?


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண