ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன்.
இந்த சீரியலில் நேற்று சத்யன் சீதாவை சந்திக்க துரையுடன் ஜெயிலுக்கு வந்திருந்த நிலையில், இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது இன்றைய எபிசோடில் சீதா சத்தியனிடம் உதவி கேட்க, “அவன் நான் எதுக்கு உதவனும்? எனக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம் இருக்கு? எனக்கும் மகாவுக்குமான பிரச்னையை நானே பார்த்துக்கறேன்” என்று சொல்ல, சீதா சேர்ந்து செய்யலாம் என்று சொல்கிறாள். உடனே “சத்யன் எதுக்கு திரும்பவும் மகா கிட்ட மன்னிப்பு கேட்கவா” என கோபப்படுகிறான்.
சீதா “நான் சொல்ற மாதிரி செய்தா இன்னும் நாலு நாளில் மகாவை இந்த ட்ரெஸ்ஸில் ஜெயிலில் பார்க்கலாம், நாம் எல்லாரும் வெளியே இருப்போம்” என்று சொல்ல, சத்யம் என்ன செய்யணும் என்று கேட்க, மகாவின் ரூமுக்குள் ரகசியக் கேமரா மற்றும் மைக் வைக்க வேண்டும்.
மகா கண்டிப்பா கஞ்சா வச்சது பற்றி பேசுவா, அந்த வீடியோவை வைத்து கோர்ட்டில் மூவ் செய்து மகாவை ஜெயிலுக்கு அனுப்பி விடலாம்” என்று சொல்ல, சூப்பர் பிளான் என இதற்கு ஒப்பு கொள்கின்றனர். இன்னொரு பக்கம், இன்ஸ்பெக்டரை கூப்பிட்டு மகா பேச, அவர் “சீதாவை தீர்த்து கட்டி விடலாம்” என்று சொல்ல, மகாவும் ‘அதான் சரி’ என்று சொல்கிறாள்.
அடுத்ததாக வீட்டுக்கு வந்த துரை மகாவின் ரூமில் ஏசி ஒயரை கட் பண்ணி விட, கொஞ்ச நேரத்தில் மஹா வீட்டுக்கு வர ஏசி ஓடவில்லை. உடனே துரையை கூப்பிட்டு “வீட்ல சும்மா தானே இருக்கீங்க, இந்த ஏசியை ரெடி பண்ணு” என்று சொல்ல, அவர் சத்யா செட் செய்த ஆட்களுக்கு போன் போட்டு வரச் சொல்கிறார். இப்படியான நிலையில் இன்றைய சீதாராமன் எபிசோட் நிறைவடைகிறது.