தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். 

Continues below advertisement


இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் வீட்டுக்கு வந்த மகாலட்சுமி சீதா மற்றும் மீராவிடம் நல்லபடியாக பேச அதை பார்த்து அர்ச்சனா டீம் அதிர்ச்சியான நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


அதாவது மகா ஏன் இப்படி மொத்தமா மாறிட்டா என அர்ச்சனா சுபாஷ் ஆகியோர் குழப்பம் அடைகின்றனர். அதே சமயம் சீதா மற்றும் மீரா மகாவின் இந்த நடிப்பை நம்ப கூடாது. ஏதோ பிளான் பண்றாங்க என பேசிக்கொள்கின்றனர். 


அதைத்தொடர்ந்து மகாலட்சுமி அர்ச்சனாவிடம் ராம் ஐபிஎஸ் ட்ரைனிங்கிற்காக வெளியூர் போக போறேன்னு தகவல் கிடைச்சிருக்கு, அவன் மட்டும் அப்படி கிளம்பி போயிட்டா சீதாவோட கதி அவ்வளவு தான் என சொல்ல அதைக் கேட்டு எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர்.


அடுத்ததாக கேரளாவில் இருந்து ராம் மற்றும் சேது என இருவரும் வீட்டுக்கு வர ராம் ஐபிஎஸ் ட்ரைனிங் போகும் விஷயத்தை சொல்ல சர்ப்ரைஸாக சொல்வதற்காக வருகிறான். ஏற்கனவே விஷயம் தெரிந்த மகா எதுவும் தெரியாதது போல நடிக்கிறாள். 


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். 


மேலும் படிக்க 


CM Stalin On michaung: ரூ.4,000 கோடி செலவு வீணா? சென்னை எத்தனை நாளில் சீரடையும்? - முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்


School College Leave: கனமழை எதிரொலி..! சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


”மழை நீர் வடிகாலுக்கு 4 கோடி கூட செலவு செய்யவில்லை” - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி !