தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சுபாஷ், அர்ச்சனா என அடுத்தடுத்து குடும்ப உறுப்பினர்களைக் கொல்ல சதிவேலை நடந்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது எதிரிகளின் டீமின் அடுத்த குறி சேதுவாக இருக்கலாம் என்று ராம் இரவெல்லாம் தூங்காமல் வீட்டுக்கு வெளியே காவல் கிடக்கிறான். அடிக்கடி சேதுவின் ரூமுக்குள் வந்து கவனித்து கொள்ள சீதா யாருக்கும் தெரியாமல் நடு இரவில் கையில் ஒரு பேக்குடன் வெளியே செல்கிறாள்.
இதனை கவனித்த ராம் அவளைப் பின்தொடர்ந்து செல்கிறான். ஓரிடத்தில் சீதா யாரையோ ஒருவரை சந்தித்து அவரிடம் இந்த பையை கை மாற்ற ராம் இவர்களை சுற்றி வளைக்கிறான், அந்த பேக்கில் என்ன இருக்கிறது என்று கான்ஸ்டபிளை விட்டு செக் செய்ய பழம், பூ என பூஜைக்கு தேவையான பொருட்கள் மட்டும் தான் இருக்கின்றன.
இருப்பினும் வீட்டிற்கு வந்த ராம் சீதாவை வளைத்து வளைத்து சந்தேகத்துடன் கேள்வி கேட்கிறான். இறுதியாக ராம், சீதா ரூமுக்குள் இருக்கும் போது சீதா “நம்பிக்கை என்பது கூட இருக்கவங்கள மேல இருக்கனும் பாஸ், ஆதாரங்கள் மேலயும், கை ரேகை மேலயும் இருக்கக் கூடாது” என கண்ணீருடன் பேசுகிறாள்.
மேலும் “உங்க அம்மா தான் என் வயிற்றில் குழந்தையாக வந்து பிறக்க போறாங்க” என்று கண்ணீருடன் சொல்ல ராமும் எமோஷன் ஆகிறான். இப்படியான நிலையில் இன்றைய சீதா ராமன் சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.
மேலும் படிக்க: Vijay: விஜய்யின் அரசியல் எண்ட்ரிக்கு வாழ்த்து சொன்ன ஷாருக் கான்: இந்திய அளவில் ட்ரெண்டாகும் தளபதி