Vijay: அரசியல் கட்சி தொடங்கிய விஜய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

 

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத, முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரின் மகனான விஜய், கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகராக மட்டும் இல்லாமல் அதிக ரசிகர்களைக் கொண்டவராகவும் உள்ளார். விஜய் பற்றிய ஒவ்வொரு தகவலையும் நெட்டிசன்கள் இணையத்தில் டிரெண்டாக்கி வருகின்றனர். மனதில் பட்டத்தை பளிச்சென கூறும் விஜய் கடந்த சில ஆண்டுகளாக அரசியலுக்கு வர இருப்பதாக பேச்சுகள் அடிப்பட்டன. அதன்படி, ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார் விஜய். 


 

விஜய் தொடங்கியுள்ள அரசியல் கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. கட்சியைத் தொடங்கி தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்த நிலையில், கட்சி கொடியையும், சின்னத்தையும் தேர்வு செய்யும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே அரசியல் கட்சி தொடங்கிய விஜய்க்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து கூறி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய்யின் அரசியல் எண்ட்ரிக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் வாழ்த்து கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யை தொலைபேசியில் அழைத்த ஷாருக்கான், அரசியல் கட்சி ஆரம்பித்ததற்கு வாழ்த்து கூறியுள்ளதாக சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. 





 

இதேபோல் நடிகர் ரஜினிகாந்த் விஜய் அரசியல் கட்சி தொடங்கியதற்கு வாழ்த்து கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்ளை சந்தித்த ரஜினி, விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார்.





 

இதேபோன்று, இயக்குநர் கார்த்தி சுப்புராஜ், நடிகர் சிபிராஜ், இயக்குநர் அட்லீ, இசையமைப்பாளர் அனிரூத், ராகவா லாரன்ஸ், தமிழ்நாட்டின் அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் முன்னதாக விஜய் அரசியல் கட்சி தொடங்கியதற்கு வாழ்த்து கூறியுள்ளனர்.