துல்கர் சல்மான், மிருணாள் தாகூர் நடிப்பில் வெளியாகி உள்ள  ‘சீதாராமம்’ படத்தின் வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளது. 


இயக்குநர் ஹனு ராகவ்புடி இயக்கத்தில் பிரபல நடிகர் துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா உள்ளிட்ட பலரது நடிப்பில உருவாகியிருக்கும் திரைப்படம்  ‛சீதாராமம்’. தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக நேற்றைய தினம் (ஆகஸ்ட் 5)  திரையரங்குகளில் வெளியான இந்தப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர்  'சீதாராமம்' திரைப்படம் உலகளவில் 25 கோடி வசூல் செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது. இந்த நிலையில் தற்போது அந்தப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. 


அந்தத்தகவல்களின் படி, கடந்த 5 நாட்களில் சீதாராமம் திரைப்படம் ( உலக அளவில்) 33 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 


தெலுங்கு -17 கோடி


ஓவர்சீஸ் - 7கோடி


கேரளா -3.5கோடி


தமிழ்நாடு -3.1 கோடி 


இந்தியாவின் இதரப்பகுதிகள் - 2 கோடி 


கதையின் கரு: 


காஷ்மீரில் நடக்கும் ஒரு மதக்கலவரத்தில் இளவரசி நூர் ஜஹானை (மிருணாள் தாகூர்), ராணவ வீரர் ராமன் ( துல்கர் சல்மான்) காப்பாற்றுகிறார். இதனையடுத்து துல்கரின் மீது காதல் கொள்ளும் நூர் ஜஹான், அவருக்கு யாருமில்லை என்பதை அறிந்து கொண்டு, காதல் கடிதங்களை எழுதுகிறார்.


ஒருக்கட்டத்தில் இருவரும் சந்தித்து காதல் வளர்த்து வர, திடீரென்று வரும் போர் பணிக்காக கிளம்புகிறார் துல்கர் சல்மான். இறுதியில் அவர் மீண்டும் நாடு திரும்பினாரா..? அவரின் காதல் என்னவானது..? அங்கு அவரது காதலிக்காக எழுதிய கடிதத்தின் நிலை என்ன ? அதற்கும் அஃப்ரீனாவிற்கும் (ராஷ்மிகா) என்ன தொடர்பு..? உள்ளிட்ட கேள்விகளுக்கான விடைதான் சீதா ராமம் படத்தின் கதை.  


நன்றி தெரிவித்து துல்கர் அறிக்கை 


அதில் தனது முதல் படத்திலிருந்து தெலுங்கு திரையுலக ரசிகர்களிடத்தில் கிடைத்த அன்பு குறித்து தெரிவித்துள்ளார். தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் நான் நடித்த ஓ காதல் கண்மணி படம் தெலுங்கில்  ஓ பங்காரம் என டப் செய்யப்பட்டு வெளியானது. மணி சாருக்கு நன்றி. ரசிகர்களாகிய நீங்கள் அனைவரும் எனக்கு வாய்ப்பு கொடுத்து என் மீது மிகுந்த அன்பு காட்டினீர்கள்.


அதன்பிறகு நாகி மற்றும் வைஜெயந்தி எனக்கு மகாநதியில் ஜெமினி கணேசன் கேரக்டரில் நடிக்க வாய்ப்பளித்தனர். அந்த படத்திற்கு நான் எதிர்பார்த்ததை விட கிடைத்த அன்பும் மரியாதையும்  அதிகம். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்,  குரூப் போன்ற படங்கள் டப் செய்யப்பட்ட போது கொடுக்கப்பட்ட ரெஸ்பான்ஸ் மறக்கவே முடியாதது. 


 






அதன்பின் சீதா ராமம் படத்துக்கு  ஸ்வப்னாவும் ஹனுவும் என்னை அணுகியபோது நான் பாதுகாப்பான கைகளில் இருக்கிறேன் என உணர்ந்தேன். தரமான படத்தை வழங்குவோம் என்று எனக்கு இருந்த நம்பிக்கை இனி நேரடியான தனித்துவம் வாய்ந்த தெலுங்குப் படங்களில் மட்டுமே எப்போதும் நடிக்க விரும்புகிறேன்.  ஹனு, மிருணாள், ராஷ்மிகா, சுமந்த் அண்ணா, விஷால், பி.எஸ்.வினோத் சார் மற்றும் பல கலைஞர்கள் ஆகியோரின் பங்கை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. தெலுங்கின் சினிமாவை விரும்பும் பார்வையாளர்களுக்கு நன்றி. சினிமாக் கலையின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர்களுக்கு நன்றி. என்னை உங்களில் ஒருவனாக நினைக்க வைத்ததற்கு நன்றி. மேலும் நீங்கள் எங்கள் மீது பொழியும் அனைத்து அன்பும் நன்றியுணர்வு நிறைந்தது என துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.