சமீரா ரெட்டி :
தமிழில் கடந்த 2008ஆம் ஆண்டு கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான 'வாரணம் ஆயிரம்' படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. அதன் பிறகு ஒரு சில படங்களில் தலைக்காட்டியவர் . தொழிலதிபரை திருமணம் செய்துக்கொண்டு குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார். சமீராவிற்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது குடும்பத்துடன் கோவாவில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. சமீரா குழந்தை பிறந்த பிறகு ஹார்மோனல் மாற்றங்களால் உடல் எடை அதிகரித்தார். அது பெண்களுக்கு நடக்கும் இயல்பான மாற்றம் என்றாலும் அதனை பலர் சமூக வலைத்தளங்களில் கேலி செய்ய தொடங்கினர்.
ஆனால் அவற்றையெல்லாம் துணிவோடு எதிர்க்கொண்ட சமீரா , சிறு வயதில் இருந்தே உடல் கேலியால் தான் சந்தித்த அவமானங்கள் அவற்றிலிருந்து எப்படி மீண்டு வந்தேன் என்பது குறித்து #PerfectlyImperfect என்ற ஹேஷ்டேக் மூலம் சமீரா தொடர்ந்து எழுதி வருகிறார். எனது உடல், எனக்கு பிடித்திருக்கிறது என எவ்வித மேக்கப் மற்றும் ட்ரிக் செய்யாமல் அப்படியே சமீரா பதிவிடும் புகைப்படங்களுக்கும் , அவரின் தன்னம்பிக்கை பதிவுகளுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
செல்லுலைட்டுகளையும் வளவுகளையும் ஏற்றுக்கொண்டேன் :
இந்த நிலையில் சமீரா சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவிட்டுள்ளார். #PerfectlyImperfect என்னும் ஹேஷ்டேக் மூலம் அவர் பதிவிட்ட புகைப்பட பதிவில் “நான் என் உடலை நேசிக்கிறேன், நான் என் உடலுக்கு கைன்ட்டாக இருப்பேன். உலகம் என்னைப் பற்றி என்ன நினைக்கிறது என்ற கவலையில் வருடங்களை வீணடித்தேன். இங்கு வருவதற்கு எனக்கு இவ்வளவு நேரம் பிடித்தது மற்றும் நான் நன்றியுள்ளவகளாக இருக்கிறேன். எனது செல்லுலைட் மற்றும் வளைவுகளுடன் கேமராவின் முன் நான் மிகவும் வசதியாக உணர்ந்ததில்லை.
உடல்கள் மாறுகின்றன அதனை நாம் புரிந்துகொண்டு ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான ஒன்றை நோக்கி உழைக்க வேண்டும். உங்களிடம் இருப்பதை வைத்து நேர்மறையாக வேலை செய்யுங்கள், மற்றவர்களில் எதிர்பார்ப்பிற்காக அல்ல “ என குறிப்பிட்டுள்ளார்.
43 வயதாகும் சமீரா ரெட்டி தற்போது இன்ஸ்டாகிராமில் தனது மாமியாருடன் சேர்ந்து ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். நடிகையாக இருந்திருந்தாலும் தனது உடலில் ஏற்படும் மாற்றங்களை மறைத்து போலியாக ஒரு போதும் சமீரா தன்னை காட்டிக்கொள்ளவில்லை. மாறாக தன் அனுபவங்களை பகிர்ந்து பலருக்கு முன் மாதிரியாக இருக்கிறார்.