நடிகர் தம்பி ராமையா தனது முடிவை மாற்றிக்கொள்ளா விட்டால் அவரது வீட்டை முற்றுகையிடுவோம் என்று ஒரு விழா மேடையில் சீமான் பேசியிருந்தார். மேடையில் தம்பி ராமையாவை வைத்துக் கொண்டே அவர் இவ்வாறு சொன்னாது பலரையும் வியக்க வைத்தது. சிலர் அச்சச்சோ தம்பி ராமையா ஏதோ அரசியல் பேசிவிட்டார் போல என திகைத்திருந்தனர். ஆனால் அப்புறம் தான் சீமான் தான் பேசவந்ததை விளக்கினார்.
ஜீவி 2 பட சில சுவாரஸ்யம்:
விஜே கோபிநாத் இயக்கத்தில் கடந்த 2019- ஆம் ஆண்டு வெளியான கிரைம் திரில்லர் படம் 'ஜீவி'. மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் விமர்சன ரீதியாக அமோக வரவேற்பு பெற்றது. இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருந்த வெற்றியின் நடிப்பு அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது. சர்வதேச பட விழாக்களிலும் இப்படத்திற்கு பல விருதுகள் கிடைத்தன.
இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜீவி படத்தின் 2-ம் பாகத்திற்கான அறிவிப்பு வெளியானது. நடிகர் வெற்றி, இயக்குநர் விஜே கோபிநாத், இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தி, நடிகர்கள் கருணாகரன், ரோகினி, மைம் கோபி என முதல் பாகத்தில் பணியாற்றிய அதே கூட்டணியுடன் ஜீவி இரண்டாம் பாகத்திலும் உள்ளது.
இந்த படத்தை மாநாடு படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். இந்த நிலையில், 'ஜீவி 2' படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
இந்த டிரைலரை நடிகர் எஸ்.ஜே சூர்யா தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். அதில், "என்ன தலைவரே திரும்பவும் லூப்பா. ஆனா இது வேற மாதிரி இருக்கே" என குறிப்பிட்டிருந்தார்.
'ஜீவி 2' திரைப்படம் விரைவில் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
பத்தவச்ச சீமான்:
இந்நிலையில் தான் படவிழாவில், நடிகர் தம்பி ராமையா தனது முடிவை மாற்றிக்கொள்ளா விட்டால் அவரது வீட்டை முற்றுகையிடுவோம் என்று ஒரு விழா மேடையில் சீமான் பேசியிருந்தார். மேடையில் தம்பி ராமையாவை வைத்துக் கொண்டே அவர் இவ்வாறு சொன்னாது பலரையும் வியக்க வைத்தது. சிலர் அச்சச்சோ தம்பி ராமையா ஏதோ அரசியல் பேசிவிட்டார் போல என திகைத்திருந்தனர். ஆனால் அப்புறம் தான் சீமான் தான் பேசவந்ததை விளக்கினார்.
தம்பி ராமையா இனிமேல் படத்தில் நடிப்பதை குறைத்துக் கொள்வதாகப் பேசியிருந்தார். அவர் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த வெகுமதி. அவர் அவருடைய முடிவை மாற்றிக் கொள்ளாவிட்டால் அவர் வீட்டை முற்றுகையிட்டுப் போராடுவோம் என்றார்.இதைக் கேட்ட பின்னர் தான் அரங்கத்தில் இருந்த அனைவருமே நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.