நாள்: 14.08.2022


நல்ல நேரம் :


மதியம் 7.45  மணி முதல் மதியம் 8.45  மணி வரை


மாலை 3.15 மணி முதல் 4.15 மணி வரை


கௌரி நல்ல நேரம் :


காலை 1.45 மணி முதல் 2.45 மணி வரை


மாலை 6.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை


இராகு :


மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை


குளிகை :


மதியம் 3.00 மணி முதல் காலை 4.30 மணி வரை


எமகண்டம் :


மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை


சூலம் –மேற்கு


மேஷம் :


மேஷ ராசி நேயர்களே, இன்று  ஆன்மீக ஈடுபாடு உங்களுக்கு ஆறுதலை பெற்றுத் தரும். புனித யாத்திரை ஒன்றை மேற்கொள்வீர்கள். அது உங்களுக்கு திருப்தி உணர்வை அளிக்கும். நீங்கள் மிகவும் சிறப்பாக பணியாற்றுவீர்கள். உங்கள் முயற்சிக்கு அங்கீகாரமும் பாரட்டும் கிடைக்கும்.


ரிஷபம்:


ரிஷப ராசி நேயர்களே, இன்று சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். வெற்றி காண கடினமாக உழைக்க வேண்டும். சிறந்த தகவல் தொடர்பாடல் மூலம் நீங்கள் நல்ல பலனைப் பெறலாம். பணியிடச் சூழல் இன்று சிறப்பாக இருக்கும். உங்கள் பேச்சின் மூலம் சிறந்த வளர்ச்சி பெறுவீர்கள். இது உங்களுக்கு வழிகாட்ட உதவும்.


மிதுனம் :


மிதுன ராசி நேயர்களே, இன்று சாதாரணமான நாள். நீங்கள் பெரியவர்களைக் கூட மகிழ்விக்கும் இனிமையான வார்த்தைகளை பேசுவீர்கள். இறை மந்திரங்கள் சொல்வது இசை கேட்பது மன ஆறுதலை அளிக்கும். பணி நிமித்தமான பயணம் காணப்படுகின்றது. உங்களுக்கு புதிய பணிகள் கொடுக்கப்படும். அது சவால்கள் நிறைந்ததாக இருக்கும்.


கடகம் :


கடக ராசி நேயர்களே,  இன்று மிகவும் சிறப்பான நாளாக காணப்படாது. இன்று உங்கள் செயல்களை சிறப்பாக திட்டமிட வேண்டும். எந்த செயலையும் செய்வதற்கு முன் நன்கு யோசிக்க வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். எதற்கும் உணர்ச்சி வசப்படாதீர்கள். பணியிடச் சூழல் மகிழ்ச்சிகரமாக இருக்காது. நீங்கள் அதிக பணிகளை சுமக்க நேரும். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும்


சிம்மம்:


சிம்ம ராசி நேயர்களே, இன்று உங்கள் செயல்களை சீராக மேற்கொள்வதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பது நல்லது. உங்கள் பணிகள் பாராட்டைப் பெறும். உங்கள் பணிகளை நீங்கள் அனுசரித்து கவனமாக மேற்கொள்வீர்கள்.


கன்னி :


கன்னி ராசி நேயர்களே, இன்று வெற்றி பெறுவதற்கான தைரியமும் உறுதியும் உங்களிடம் காணப்படும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். உங்கள் பணிகளை திறமையுடன் ஆற்றுவீர்கள். உங்கள் சக பணியாளர்களுடன் நல்லுறவு பராமரிப்பீர்கள்.


துலாம் :


துலாம் ராசி நேயர்களே, இன்றைய நாள் சராசரிக்கும் அதிகமான பலன்களை அளிக்கும். உங்கள் புத்திசாலித்தனத்தை நன்கு பயன்படுத்துவீர்கள். உங்கள் தரத்தை மேம்படுத்தவும் வெற்றி பெறவும் நீங்கள் முயற்சி எடுக்கலாம். பணி நிமித்தமான பயணம் காணப்படுகின்றது. நீங்கள் உங்கள் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருப்பீர்கள்.


விருச்சிகம் :


விருச்சிக ராசி நேயர்களே, இன்று மந்தமான நாளாக இருக்கும். உங்கள் உணர்ச்சி மற்றும் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும். பொறுமையுடனும் நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும். இன்று பணிகள் அதிகமாக காணப்படும். உங்கள் பணிகளை கவனமாக முடிக்க நீங்கள் சில சௌகரியங்களை விட்டுக் கொடுக்க நேரும்.


தனுசு :


தனுசு ராசி நேயர்களே, இன்று எதிர்பாராத வகையில் நன்மை கிடைபதற்கான வாய்ப்புள்ள நாள். இன்றைய சூழ்நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.இன்று பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். நீங்கள் பணத்தை சேமிப்பீர்கள்.


மகரம் :


மகர ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு சுமாரான பலன்கள் கிடைக்கும். உங்கள் மனதில் தேவையற்ற குழப்பங்கள் காணப்படும். இன்று அனுசரித்துப் போவது நல்லது. எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் இன்று சிறப்பாக பணியாற்றுவீர்கள். என்றாலும் சக பணியாளர்களுடன் வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.


கும்பம்:


கும்ப ராசி நேயர்களே,  இன்று சராசரிக்கும் அதிகமான பலன்கள் கிடைக்கும். ஆன்மீக ஈடுபாட்டின் மூலம் நீங்கள் மன திருப்தி பெற இயலும்.பங்கு வர்த்தகம் போன்ற புதிய முதலீடுகள் திருப்தி அளிக்கும். இவற்றின் மூலம் திருப்தியான பண வரவு காணப்படும்.


மீனம்:


மீன ராசி நேயர்களே, இன்று சற்று மந்தமான நாள். எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் யோசிக்க வேண்டும். பலன்கள் நீங்கள் எதிர்பார்த்தபடி காணப்படாது. நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். இன்று பண விரயம் காணப்படும். தேவையற்ற செலவுகள் செய்ய நேரும்.இது உங்களுக்கு கவலை அளிக்கும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண