ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம் பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் மீண்டும் வைரலாகி வருகிறது. 


பாகுபலி எனும் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு ராஜமெளலி இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியான திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். 1920 ஆம் காலக்கட்டத்தில் வாழ்ந்த அல்லுரி சீதா ராமராஜூ மற்றும் கொமரம்பீம் ஆகிய இரண்டு சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு இந்தப்படம் உருவாக்கப்பட்டது. 


படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடித்தனர். இவர்களுடன் ஆலியா பட், ஸ்ரேயா சரண், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.  தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் இப்படம்  வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற  இந்தப்படம் உலகம் முழுக்க 1,100 கோடிக்கு மேல் வசூலித்ததாக தெரிவிக்கப்பட்டது.


 






 படம் வெளியாவதற்கு முன்னதாகவே படத்தின் பிரமாண்டத்திற்கு ஏற்றவாறு, பல கட்ட வகையில், பல இடங்களில் படத்திற்கு பிரோமோஷன் நடத்தப்பட்டது. அதே போல ‘நாட்டு நாட்டு’ பாடலும், அதில் இடம்பெற்ற ஜீனியர் என்.டி.ஆர், ராம்சரண் ஆகியோரின் நடனமும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது.


 


                             


இன்ஸ்டா, ஃபேஸ்புக், ட்விட்டர் என பல தளங்களில்  ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனமாடி பலர் வீடியோக்களை பதிவு செய்தனர். படம் வெளியான பின்னர் இன்னும் அதிகமான வரவேற்பை பெற்ற அந்த பாடல், தெலுங்கில் 99 மில்லியன் பார்வையாளர்களையும், தமிழில் 28 மில்லியன் பார்வையாளர்களையும் அடைந்து இருக்கிறது. இந்த நிலையில் மீண்டும் அந்த பாடல் சமூகவலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.


 


ஆம் அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரில் உள்ள ஒரு நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள்  ‘நாட்டு நாட்டு’ பாடலை கூட்டமாக நின்று பாடுகின்றனர். இந்த வீடியோவை ஆர்.ஆர்.ஆர் ட்விட்டர் பக்கமான லைக் செய்யும் வகையில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் எமோஜிக்களை தட்டிவிட்டு இருக்கிறது. 


 






முன்னதாக, ஆஸ்கர் விருது விழாவில் இந்தியா சார்பில் பங்கேற்கும் படமாக ஆர்.ஆர்.ஆர் தேர்வு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குஜராத்தி மொழியில் வெளியான  ‘Chhello Show’ படம் அனுப்பபட்டது குறிப்பிடத்தக்கது.