2020ஆம் ஆண்டு வெளியான ஸ்கேம் 1992 (Scam 1992 : The Harshad Mehta Story)  இணைய தொடரின் இரண்டாம் பாகத்தில் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.

Scam 1992 : The Harshad Mehta Story

1992ஆம் ஆண்டு இந்திய பங்குச் சந்தையில் நிகழ்ந்த மிகப்பெரிய  மோசடியை மையமாகக் கொண்டு உருவான இணையத் தொடர்தான் ‘ஸ்கேம் 1992’. மொத்தம் பத்து எபிசோட்களை கொண்ட இந்தத் தொடரை ஹன்சல் மெஹ்தா மற்றும் ஜெய் மெஹ்தா இருவர் இணைந்து இயக்கினர்.

இந்தி மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் இந்தத் தொடர் ரசிகர்களிடையே பிரபலமானது. இந்திய பங்குச் சந்தையை ஸ்தம்பிக்க வைத்து 5000 கோடி மோசடி செய்த ஹர்ஷத் மெஹ்தா என்கிற மனிதனின் கதையை மையமாக இந்தத் தொடர் விறுவிறுப்பாக அமைந்து ரசிகர்களை ஈர்த்தது. இந்தத் தொடரின் சின்ன சின்ன காட்சிகள் மற்றும் பின்னணி இசை ரீல்களாக பயன்படுத்தப்படும் அளவுக்கு பிரபலமானது. தற்போது இந்தத்  தொடரின் இரண்டாவது சீசனின் ட்ரெய்லரை வெளியாகியுள்ளது.

இன்னொரு சுவாரஸ்யம் இதோ இருக்கு:

Karuththarajapalayam: கான்க்ரீட் வீடு வேணாம், உசுறுதான் முக்கியம்.. படிகட்டுக்கு நோ, தச்சர்களே இல்லாத கருத்தராஜபாளையம் - சாமி குத்தம்னு பதறும் மக்கள்

Scam 2003 : The Telgi Story

தற்போது இந்தத் தொடரின் இரண்டாவது சீசன் 2003ஆம் ஆண்டு நாட்டையே உளுக்கிய மற்றொரு மிகப்பெரிய ஊழலை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது. சென்ற முறை 5000 கோடி என்றால் இந்த முறை சுமார் 30,000 கோடி ஊழல் செய்த அப்துல் கரிம் தெல்கி என்பவரை மையப்படுத்தி சஞ்ஜய் சிங் என்பவர் எழுதிய ‘பத்திரிகையாளரின் நாட்குறிப்பு’ என்கிற புத்தக்கத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது.  இரண்டாவது சீசனில் முந்தைய சீசனில் வைரலான பின்னணி இசையை இந்தத் தொடரிலும் பயண்படுத்தியுள்ளார்கள்.

படக்குழு

துஷார் ஹிராநந்தனி இந்தத் தொடரை இயக்கியுள்ளார். அப்ளாஸ் சோசியல் மற்றும் எஸ்.பி. என் ஸ்டுடியோ நெக்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர். அப்துல் கரீம் தெல்கியாக ககன் தேவ் ராயர் நடித்துள்ளார், வரும் செப்டம்பர் 2ஆம் தேதி சோனி லைவில் இத்தொடர் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் ஸ்கேம் 1992 தொடரின் ரசிகர்கள் உற்சாகமாக இந்தத் தொடரை எதிர்நோக்கி காத்துள்ளனர்.