தமிழில் ஜெயம் ரவி நடித்த வனமகன் படத்தில் அறிமுகமான நடிகை சாயிஷா ஆர்யாவுடன் கஜினிகாந்த், காப்பான், டெடி உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதனிடையே இவரும் ஆர்யாவும் காதலித்து வந்த நிலையில், கடந்த 2019 ஆம் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு கடந்த ஜூலை மாதம் பெண் குழந்தை பிறந்தது.
அந்தக் குழந்தைக்கு ‘ஆரியானா’ என்று வைக்கப்பட்டுள்ளதாக நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதற்கு பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில்தான் குழந்தை பிறப்புக்கு பிறகு மீண்டும் தனது பழைய உருவத்திற்கு மாற முயற்சித்த நடிகை சாயிஷா ஜிம்மில் சேர்ந்து உடற்பயிற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்தார். மீண்டும் நடிக்க ஆர்வமாக இருக்கும் நடிகை சாயிஷா கஜினிகாந்த், டெடி படங்களை தொடர்ந்து 3 ஆவதாக ஒரு படத்தில் இணைய இருப்பதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வரும் சாயிஷா அண்மையில் ஆர்யாவுடன் திருமண நாளை கொண்டாடினார்.
இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டார். அந்தப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சாயிஷா ஆளே மாறிபோய்விட்டதாக கமெண்டுகளை தட்டி வருகின்றனர்.