கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான சுப்ரமணியபுரம் படத்தில் நடித்ததோடு அதனை இயக்கியும் இருந்தார் சசிகுமார். அந்தப் படம் விமர்சன ரீதியாகவும் சரி, வசூல் ரீதியாகவும் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றது. 1980 காலக்கட்டத்தில் நடக்கும் கதையை தத்ரூபமாக திரையில் காண்பித்திருப்பார்சசி. இன்றளவும் அந்தப் படத்திற்கு ஏராளனமான ரசிகர்கள் இருக்கின்றனர்.
அதன் பிறகு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் நாடோடிகள் படத்தில் நடித்தார். அந்தப் படமும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அதனைத்தொடர்ந்து ஈசன் படத்தை இயக்கினார். அந்தப் படம் சரியாக போகாத நிலையில், தொடர்ந்து நடிப்பிலேயே கவனம் செலுத்தி வந்தார் சசி. தொடர்ந்து நடித்த சசிகுமார் நடித்த சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பிரம்மன், பாலா இயக்கத்தில் வெளியான தாரை தப்பட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இதனிடையே சசிகுமார் மீண்டும் சுப்ரமணியபுரம் போன்ற படங்களை இயக்க வேண்டும் என்று ரசிகர்கள் கேட்டு வந்தனர்.
இந்த நிலையில் சசிகுமார் மீண்டும் ஒரு படத்தை இயக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தத் தகவலின் படி, சசிகுமார் குற்றப்பரம்பரை நாவலை படமாக எடுக்க திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. முன்னதாக, வேலராம மூர்த்தி எழுதிய குற்றப்பரம்பரை நாவலை இயக்குநர் பாரதிராஜா எடுக்க இருப்பதாக கூறி வந்த நிலையில், இயக்குநர் பாலாவும் அந்த நாவலை படமாக எடுக்க இருப்பதாக கூறினார்.
இதனால் பாரதிராஜாவுக்கும், பாலாவுக்கும் இடையில் யார் இந்த நாவலை படமாக இயக்குவது என்ற போட்டி எழுந்தது. இந்தப் போட்டியில் இருவருக்கும் இடையே வார்த்தை போர் மூண்டது. அந்தப் பிரச்னை ஒரு வழியாக முடிந்த நிலையில், தற்போது அந்த நாவலை, சசிகுமார் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. சசிகுமார் பாலாவிடம் துணை இயக்குநராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அதிகாரபூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: