Hyderabad Crime News: மருமகனுடன் உடலுறவு - வீடியோ எடுத்து மிரட்டிய அத்தை போக்சோவில் கைது! அப்போ மருமகன் வயது..?

அத்தையே மருமகனிடம் பாலியல் ரீதியில் உறவு வைத்து மிரட்டி பணம் பறித்த சம்பவம் ஹைதாராபாத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

மருமகனிடம் பாலியல் உறவு வைத்து அதை வீடியோவாக எடுத்து மிரட்டி பணம் பறித்த அத்தையை போலீசார் கைது செய்தனர். அத்தை மீது  போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Continues below advertisement

பெங்களூருவில் வசிக்கும் அத்தை மருமகனை சந்திப்பதற்காக அடிக்கடி ஹைதராபாத் வருவார். 9ஆம் வகுப்பு படிக்கும் மருமகன் 14 வயது சிறுவன் ஆவார். மருமகனை சந்திக்கும் வரும்போதெல்லாம், அத்தை ஹைதராபாத்தின் மிகவும் பிரபலமான ஏரியாவான பஞ்சாரா ஹீல்ஸ் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் ரூம் போட்டு தங்கி மருமகனுடன் பாலியல் ரீதியாக உறவு வைத்துள்ளார். மருமகனுடன் உறவு வைக்கும்போதெல்லாம், தனது முன்னாள் கணவர் உதவியுடன் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார் அந்த அத்தை. அதன்பிறகு, அந்த வீடியோவை லீக் செய்துவிடுவேன் என்று மருமகனை மிரட்டியுள்ளார். சிறுவனான மருமகனை மிரட்டி, மிரட்டி இதுவரை தங்க நகைகள் மற்றும் 6 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துள்ளார். மேலும் படிக்க: POCSO | வாடகை வீடு.. வன்மம்.. சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த போலீஸ்காரர் மீது பாய்ந்தது போக்சோ

திடீரென்று ஒருநாள் வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணம் காணாமல் போனதைப் கண்டு சிறுவனின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தங்களின் மகனிடம் விசாரித்தபோது, அத்தை தன்னை மிரட்டி பணம் பறித்ததாக கூறியுள்ளான். அதன்பிறகு, அத்தையின் மிரட்டல் நாடகம் வெளிச்சத்துக்கு வந்தது.  மேலும் படிக்க: பரிசோதனையில் அந்த இடங்களில் எல்லாம் தொட வைத்த பெண் - வீடியோ எடுத்து டாக்டரை மிரட்டிய கும்பல்

இதனைத்தொடர்ந்து, பெற்றோர், அந்தப் பெண்ணின் மீது போலீசாரிடம் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் பெண் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். Dowry Death | ''அவன் சரியில்லை'' : மீண்டும் கடிதம்.. கேரளாவில் மீண்டும் ஒரு வரதட்சணை தற்கொலை! விடாது தொடரும் துயரம்!

அத்தையே மருமகனிடம் பாலியல் ரீதியில் உறவு வைத்து மிரட்டி பணம் பறித்த சம்பவம் ஹைதாராபாத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடியூபில் வீடியோக்களை காண

 

Continues below advertisement
Sponsored Links by Taboola