மலையாளத்தில் கலாபம் படம் மூலமாக அறிமுகமான நடிகர் ஜான் கொக்கன், அஜித் நடித்த வீரம், பாகுபலி, கே.ஜி.எஃப் உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடந்த ஆண்டு தமிழில் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்ததின் மூலம் பிரபலமானார்.


மும்பையில் பிறந்த ஜான், கடந்த 2002 ஆம் ஆண்டு நடிகை மீரா வாசுதேவனை திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து இவர்களுக்கு ஒரு மகன் பிறந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இதனையடுத்து பிரபல தொகுப்பாளினியாகவும் நடிகையாகவும் வலம் வந்த நடிகை பூஜா ராமச்சந்திரனை திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதி தொடர்ந்து தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்களது செய்யும் பிட்னஸ் நடவடிக்கைகள், ட்ராவலுக்கு சென்ற இடங்கள் தொடர்பான புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். 






 


 


 






அந்த வகையில் தற்போதும் அவர்கள் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளனர். அதில் ஸ்விம்மிங் பூலில் இவரும் நீந்தி விளையாடி கொண்டிருக்கின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளஙளில் வைரலாகி வருகிறது.