கடந்த 2021 ஆம் ஆண்டு இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான படம் “சார்பட்டா பரம்பரை”. இந்த படத்தில் ஆர்யா, துஷாரா விஜயன், பசுபதி, ஜான் கொக்கைன், ஜான் விஜய், கலையரசன், ஷபீர் கல்லரக்கல் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.


குத்துச்சண்டையை மையமாக வைத்து ஓடிடியில் நேரடியாக வெளியான இப்படம் ரசிகர்களின் மத்தியில் அமோகமான வரவேற்பை பெற்றது. படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வடிவமைப்பும் மக்களின் மனங்களில் எளிதாக பதிந்து  பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த வகையில் அப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் நடைபெறவுள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் நடிகர் ஆர்யா தெரிவித்ததை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் பொங்குகிறது.


சார்பட்டா 2:


யாரும் எதிர்பாராத நேரத்தில் இந்த அப்டேட் வெளியானதில் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர் திரை ரசிகர்கள்.   மேலும் இப்படத்தின் மற்ற நடிகர்கள், கலைஞர்கள் குறித்த விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


 



ட்ரெண்டிங்காகும் வடசென்னை 2 :


ஒரு புறம் சார்பட்டா 2 பணிகள் நடைபெற இருப்பதாக தகவல்கள் எதிர்பாராத நேரத்தில் பகிரங்கமாக வெளியிடப்பட்ட நிலையில் மறுபக்கம் வடசென்னை படத்தின் இரண்டாம் பாகத்திற்காகவும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்கள் ரசிகர்கள். சார்பட்டா 2 படத்தின் அப்டேட் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வரும் சமயத்தில் சைலண்டாக ஹேஷ்டேக்குடன் ட்ரெண்டாகி வருகிறது வடசென்னை 2.


80களில் வட சென்னையில் நடைபெற்ற கேங் வார் கதையை மையமாக வைத்து வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. வாத்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் பேசுகையில் இயக்குனர் வெற்றிமாறன் தயார் என்றால் நானும் ரெடி தான் என வடசென்னை 2 பற்றி ஹிண்ட் கொடுத்தது மேலும் அதன் ஆர்வத்தை தூண்டியுள்ளது. 


சைலண்டாக தயாராகும் வெற்றிமாறன் :


இயக்குனர் வெற்றிமாறனின் 'விடுதலை' திரைப்படத்தின் பணிகள் முழுவதுமாக முடிவடைந்த நிலையில் அடுத்தாக தொடங்கப்பட இருந்த வாடிவாசல் திரைப்படத்தின் ஷெட்யூல் சில காரணங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதனால் இயக்குனர் வெற்றிமாறன் வடசென்னை 2 படத்தின் திரைக்கதையை தயார் செய்து வருகிறார் விரைவில் அதன் அப்டேட் வெளியாகும் என நெருங்கிய சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை. 


சார்பட்டா 2 மற்றும் வடசென்னை 2 இரண்டும் ஒரே நேரத்தில் வெளியாக வேண்டும் என்பது ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது. இது தான் தற்போது இணையத்தில் மிகவும் ட்ரெண்டிங்காக பகிரப்பட்டு வரும் ஒரு தகவலாக உள்ளது.