சர்தார் படத்தின் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் தன்னைச் சுற்றி நடந்த டிஜிட்டல் இந்தியாவின் ஏமாற்று வேலைகளை நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இரும்புத்திரை, ஹீரோ ஆகிய படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சர்தார் படத்தில் கார்த்தி நடித்துள்ளார். தீபாவளி வெளியீடாக வரும் அக்டோபர் 21 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தில் ஹீரோயினாக ராஷி கண்ணா ஹீரோயினாக நடிக்க, லைலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சர்தார் படத்தின் தமிழக திரையரங்க உரிமையை ரெட் ஜெயிண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.
இதனிடையே இயக்குநர் பி.எஸ்.மித்ரன் தனது முதல் படமான இரும்புத்திரையில் இருந்தே ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த படத்தில் டிஜிட்டல் இந்தியாவின் மற்றொரு முகத்தை வெளிப்படையாக காட்டியிருந்தார். நாம் தினந்தோறும் பார்க்கும் ஆன்லைன் பணமோசடி விவகாரங்களை கையாண்டு ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றார். இரும்புத்திரை படத்தில் நடிகர் விஷால்,அர்ஜூன், நடிகை சமந்தா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
இதனிடையே நேர்காணல் ஒன்றில் இரும்புத்திரை படத்திற்கு பின்னால் இருந்த கதையை தெரிவித்துள்ளார். அதன்படி என்னோட நண்பருக்கு ஒரு மெசெஜ் வந்தது. அக்கவுண்டில் இருந்து ரூ.15 ஆயிரம் எடுக்கப்பட்டிருப்பதாக இருந்தது. நாங்கள் முதலில் இது போலி செய்தி என நினைத்து செக் பண்ணி பார்த்தோம். உண்மையில் பணம் காணாமல் போயிருந்தது. உடனடியாக வங்கிக்கு சென்று விசாரிக்கப் போனோம். அவர்களை எங்களிடம் செம கூலாக வந்து உக்காருங்க என சொல்றாங்க.
பணம் காணாம போன நாங்க பதட்டமா இருக்கோம். ஆனால் அக்கவுண்ட் வச்சிருக்க அந்த வங்கிக்காரர்களுக்கு ஒரு பதட்டமும் இல்லை.ஏனென்றால் இது அடிக்கடி நடக்கும் ஒரு சம்பவம். இதன் பின்னணியை தேடிப்போன போதுதான் மிகவும் அதிர்ச்சிகரமான சம்பவங்களும் அரங்கேறியது. எனக்கு தெரிஞ்ச நகரம்ன்னா என்னன்னு தெரியாத ஒரு பையன் சமூக வலைத்தளங்கள் குறித்த விழிப்புணர்வு வர்றதுக்கு முன்னாடி ஒரு பேஸ்புக் அக்கவுண்ட் கம்பெனியில் இருந்து ஆரம்பித்து கொடுத்துள்ளார்கள்.
அப்போது வெளிநாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் அந்த பையனின் பேஸ்புக் போட்டோவை லைக் செய்து பின் பேசியுள்ளது. ஒரு கட்டத்தில் காதலை சொல்லி பிறந்தநாளுக்கு கிஃப்ட் அனுப்புவதாக சொல்லியுள்ளது. பின் பிறந்தநாள் அன்று சுங்கத்துறையில் இருந்து பேசுவதாக சொல்லி கிட்டதட்ட ரூ.2 லட்சம் அளவுக்கு ஏமாற்றினார்கள். இதேபோல் மிகப்பெரிய அரசு அதிகாரியும் ஆன்லைனில் ஒரு பெண்ணிடம் பேசினார். அவரிடம் இருந்து அப்பெண் ஒன்றரை கோடி மோசடி செய்தது.
ஓடிபி நம்பர் சொல்ல சொல்லி வரும் மோசடி அழைப்புகளை வரும் போலியான கால் சென்டர் வேலையை ஜம்தாரா என்னும் ஊரில் சட்டப்படி என நினைத்து ஒரு பணியாகவே செய்து வருகிறார்கள் என அந்த நேர்காணலில் பி.எஸ்.மித்ரன் தெரிவித்துள்ளார்.