மைனா நந்தினி:


விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடர் மூலமாக பிரபலமானவர் நந்தினி. அந்த சீரியலில் அவரது கதாபாத்திரம் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து மைனா நந்தினி என்று அழைக்கப்பட்டார். கலக்கப்போவது யாரு 5, மிஸ்டர் அண்ட் மிசஸ் 1 நிகழ்ச்சி தொகுப்பாளர், மிஸ்டர் அண்ட் மிசஸ் சீசன் 3 போட்டியாளர், பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர் என விஜய் டிவி மெட்டீரியலாகவே பார்க்க பட்ட மைனா நந்தினி தற்போது திரைப்படம், ஷார்ட் ஃபிலிம், வெப் சீரிஸ், பிஸ்னஸ் என படு பிசியாக இயக்கி கொண்டிருக்கிறார்.


சமீபத்தில் இவர் நடிப்பில் ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியான 'சட்னி சாம்பார்' என்ற வெப் சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்றது. சொல்லிக்கொள்ளும்படி சினிமா வாய்ப்புகள் இல்லாத நிலையில் கணவருடன் இணைந்து யூடியூப் பிளாக் வெளியிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். மேலும், கணவருடன் இணைந்து புள்ளத்தாச்சி என்ற தொடரை வெளியிட்டு வருகிறார்.




புள்ளத்தாச்சி:


புள்ளத்தாச்சி என்ற தொடரின் 2 எபிசோடுகள் மட்டுமே வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில் அதற்குள்ளாக அந்த தொடருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இருவருமே கண்ணீருடன் பகிர்ந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் மைனா நந்தினி கூறியிருப்பதாவது, "புள்ளத்தாச்சி தொடர் எடுக்க நாங்கள் இலங்கைக்கு சென்றிருந்தோம். அங்கு பல இடங்களில் ஷூட் செய்து ஹாட் டிஸ்கில் ஸ்டோர் செய்து வந்தோம். அதை எடுத்து சிஸ்டத்துல போட்டு பார்த்தால் அதுல எதுவுமே இல்லை. என்ன ஆச்சுன்னே தெரியவில்லை.


இதுவரையில் பட்ட கஷ்டங்களுக்கு பலன் இல்லாம போய்டுச்சு. எங்களோடு சேவிங்ஸ் எல்லாத்தையும் போட்டோம், அதோடு கையிலிருந்த காசையும் போட்டு தான் ஷூட் செய்தோம். ஆனால் இப்போது எல்லாமே மொத்தமா போய்டுச்சு. என்ன செய்வதென்றே தெரியவில்லை என்று பேசியுள்ளார்". இதே போன்று அவரது கணவர் யோகி கூறுகையில், "2 ஹாட்டிஸ்கை ஒரே ஹாட்டிஸ்கா கொண்டு வர கொஞ்சம் கஷ்டப்பட்டு எல்லாத்தையும் ஒரே ஹாட்டிஸ்கா கொண்டு வந்தோம். ஆனால், அந்துல உள்ள ஃபுட்டேஜ் எல்லாத்தையும் மீட்க லட்சங்கள் ஆகும் என்று சொல்றாங்க.




மொத்த காசும் போச்சு:


அதற்கான காசு எங்களிடம் இல்ல. ஏனா, எல்லா காசையும் போட்டு தான் இலங்கையில் ஷூட் செய்தோம், மொத்த காசும் போச்சு. அக்கவுண்டுல ஜீரோ தான் இருக்கு. ஆனா, உங்களிடம் காசு இல்லையா? அது தான் விளம்பரம் வருதேனு கூட நீங்கள் கேட்கலாம். அதெல்லாம் இல்ல, இந்த தொடர் ஆரம்பிச்ச போதிலிருந்து அடிமேல் அடி தான். ஆரம்பிக்கும் போதே எனக்கு உடம்புசரியில்ல. கேமரா மேனும் தூங்காம வேலை பார்த்தாரு, எடிட்டருக்கும் உடம்பு சரியில்லாம போச்சு என்று பேசியுள்ளார்.


இலங்கையில் போயி 11 நாட்கள் ஷூட் செய்து எடுத்துட்டு வந்த ஹாட்டிஸ்க் கீழே விழுந்ததால் ஒர்க் ஆகல. அதே போன்று மீண்டும் ஷூட் செய்வதற்கு செலவு நிறைய வரும். ஏனென்றால் மேக் அப், காஸ்டியூம், அதே சீன்ஸ், டிராவல், ஆர்டிஸ்ட், டப்பிங், பேக்ரவுண்ட் மியூசிக் என்று எல்லாத்துக்கும் நிறைய செலவு ஆகும். இதனால் திரும்ப எடுத்தால் இன்னும் நஷ்டம் தான் வரும். ஆதலால் புள்ளத்தாச்சி தொடரை இதோடு முடிக்க முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளனர்.