தமிழ்நாட்டில் இன்று இரவு 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, அரியலூர், திருப்பூர் மற்றும் தேனி ஆகிய 12 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணிவரையில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
அடுத்த 7 தினங்களுக்கு வானிலை முன்னறிவிப்பு:
03-12-2024:
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி பெரம்பலூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
Also Read: School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
04-12-2024:
தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
05-12-2024 முதல் 09-12-2024 வரை:
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Also Read: Tiruvannamalai Landslide: திருவண்ணாமலை நிலச்சரிவுக்கு காரணம் என்ன? ஐஐடி சொல்வது என்ன?