சரவணபவன் உணவகத்தின் உரிமையாளர் ராஜகோபால் தொடர்பான வழக்கை, ஜெய்பீம் இயக்குநர் திரைப்படமாக எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ராஜகோபால் குறித்து அவதூறு பரப்பும் வகையில் திரைப்படம் எடுத்தால் , சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என வழக்கறிஞர் கணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்


வழக்கு:Saravanabhavan Rajagopal's case




தமிழ்நாட்டில் சரவணபவன் உணவகத்தின் நிறுவனர் ராஜகோபால் மற்றும் ஜீவ ஜோதி வழக்கு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மேலும் ஜீவஜோதியின் கணவரான சாந்தகுமார் கொலை வழக்கில், ராஜகோபால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் சில நாட்களுக்கு பின்னர்  உடல் நல குறைவால் ராஜகோபால் மறைந்தார். 


திரைப்படம்:




இந்நிலையில் ராஜகோபால் வழக்கு குறித்து, ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தை ஜங்கிள் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும், ஜீவ ஜோதி  கதாபாத்திரத்தில் இந்தி நடிகை நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இத்திரைப்படத்தை, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளிலும் வெளியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


எச்சரிக்கை:


ராஜகோபால் குறித்து அவதூறு பரப்பும் வகையில் திரைப்படம் எடுக்கப்பட்டால் , இயக்குநர் உள்ளிட்டோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என வழக்கறிஞர் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


Also Read: ”பாளையங்கோட்டை சிறை கைதிகள் மூன்று பேர் கடந்த ஒரே வாரத்தில் அடுத்தடுத்து ஓட்டம் பிடித்துள்ள சம்பவம் சிறைத்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது”



 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண