மதுரை ஒருங்கிணைந்த மாவட்ட அமமுக சார்பில் அமமுக செயல்வீரர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி., தினகரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசுகையில், ”கன்னியாகுமரி முதல் ஒசூர் வரை 234 தொகுதிகளிலும் அமமுகவின் கட்டமைப்பை உருவாக்கியுள்ளோம்.
தொண்டர்களை வைத்து அம்மாவின் திருப்பெயரிலயே அமமுக செயல்பட்டுவருகிறது. மக்களின் பணத்தை தண்ணீராக செலவழித்து கொண்டீருந்தவர்கள் அம்மா, எம்.ஜி.ஆர் இருந்த தலைமை பதவியை பணம் கொடுத்து வாங்கியிருக்கிறார். வைத்தியலிங்கம் கூறியிருக்கிறார் காசுகொடுத்துதான் எடப்பாடி பழனிச்சாமி தலைமை பதவியை ஏலம் போட்டு அம்மா, எம்ஜிஆருக்கு அசிங்கத்தை ஏற்படுத்தி நீதிமன்றத்தில் குடுமிபிடி சண்டையில் உள்ளது.
எந்த வழக்கில் சிறைக்கு செல்ல போகின்றாரோ என்ற அச்சத்துடன் ஈபிஎஸ் அணி இருந்துவருகிறது. ஆட்சியில். இருந்தபோது மக்கள் பணத்தை கொள்ளையடித்து உப்பை திண்டவன் தண்ணி குடித்துக்கொண்டிருக்கின்றனர். யார் காலையாவது பிடித்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக, தலைமை பதவியை தவறான பணத்தின் மூலம் கிடைத்துள்ளது. இது அவருக்கு உதவி செய்வதில்லை. உண்மையாவின் அம்மாவின் இயக்கம் அமமுக தான், உடல் அங்கும், உள்ளம் இங்கும் என்ற நிலையில் தான் சிலர் அதிமுகவில் உள்ளனர். விரைவில் அவர்கள் வருவார்கள். அதிமுக கம்பெனி போல ஆகிவிட்டது, யார் அதிகமாக இன்வெர்ஸ்ட் பண்ணுகிறாரோ அவர் தலைமை ஆகிறலாம். ஸ்டாலின் நினைத்தால் கூட அங்கே பொதுச்செயலாளர் ஆகிவிடலாம் என்ற அவல நிலைதான் உள்ளது. ஆர்.கே.நகர் தேர்தல் முடிந்த பின் அம்மாவின் பெயரில் கட்சியை தொடங்கவேண்டும் என எண்ணினேன்.
அம்மா மறைவிற்கு பின் நடந்தது அம்மாவின் ஆட்சியும் அல்ல; கட்சியும் அல்ல; அம்மாவின் ஆட்சியை தவறாக செய்தார்கள் அதனால் அவர்களை கண்டித்தேன். ஆர்கேநகரில் தேர்தலில் நிற்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை; அந்த காலகட்டத்தில் தளவாய்சுந்தரம் போன்றோர் தான் பொதுச்செயலாளர் சின்னம்மாவை சந்தித்து என்னை தேர்தலில் நிற்க வேண்டும் என கூறினார்கள். எடப்பாடி அணியினரை ஊழல் செய்யாதிங்கனு சொன்னேன் ஆனால் அவர்கள் கேட்கவில்லை. அதனால்தான் தனிக்கட்சி்தொடங்க எண்ணினேன், தற்போது எடப்பாடி அணியினர் செய்த ஊழலுக்கு நாள்தோறும் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். எடப்பாடி அணியினர் மடியிலயே டன் கணக்கில் பயம் உள்ளது. பதிவியை காப்பாற்ற மட்டுமே உள்ளனர், தொண்டர்களையோ, அம்மாவின் ஆட்சியை காப்பாற்றமாட்டார்கள். வினை விதைத்தவர்கள். வினை அறுப்பான் என்ற நிலையை அனுபவிப்பார்கள்.
நம்பிக்கை துரோகத்திற்கு மன்னிப்பு இல்லை, நம்பிக்கை துரோகம் செய்தவர்கள் அவர்களது காலத்திலயே அழிந்துபோவார்கள். மகேந்திரன் , முருகன் , டேவிட் அண்ணாத்துரை போன்றோர் தேர்தலில் தோற்றாலும் சோர்ந்துபோகவில்லை; பதவி என்பதை எதிர்பார்த்தவர்கள் தான் நம்மிடம் இருந்து ஓடிவிட்டனர். அமமுக ஆட்சிக்கு வந்தால்தான் ஜனநாயக முறைப்படி அதிமுகவை மீட்க முடியும். 5வருடத்தில். 3பொதுச்செயலாளரை மாற்றிவிட்டார்கள். அதிமுக தொண்டர்கள் யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதிமுகவை மீட்டெடுப்பவர்கள் அமமுகவினர்தான். அதிமுகவின் சண்டையை கண்டுகொள்ளவேண்டாம், நமது சின்னம் குக்கரையும், அமமுகவின் கொடியையும் பட்டி தொட்டி எங்கும் எடுத்துசெல்லவேண்டும்.
உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும். அம்மாவின் உண்மையான இயக்கம் அமமுகதான். யாருக்காகவும் பின்வாங்க போவதில்லை, யாரோடும் சமரசம் செய்வதில்லை, அம்மாவின் ஆட்சியை அமமுக தலைமையில் கொண்டுவருவேன், தொண்டர்களை மட்டுமே நம்பி கழகத்தை நடத்திவருகிறேன்” என்றார்.