80 - 90களில்  தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக கலக்கியவர் நடிகர் சரத்குமார். தனது கட்டுக்கோப்பான உடற்கட்டால் ஏராளமான ரசிகர்களை தன் வசம் ஈர்த்தவர். இன்றைய இளைஞர்கள் மத்தியிலும் இவருக்கு பெரிய அளவில் அறிமுகம் தேவை இல்லை. பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பெரிய பழுவேட்டரையர் என்ற கதாபாத்திரத்தில் கம்பீரமாக நடித்தவர். 


சமீபத்தில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் 2 படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் மிகவும் சந்தோஷமாக கெத்தாக என்ட்ரி கொடுத்த  நடிகர் சரத்குமாரை பார்த்து கூட்டத்தில் இருந்த ஒருவர் 'ரம்மி நாயகன்' என கத்தியுள்ளார். இதை கேட்ட சரத்குமார் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போனார். இந்த சமத்துவம் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பேசப்பட்டு வருகிறது.


 



 


உயிரை குடிக்கும் ரம்மி :


ஆன்லைன் ரம்மி விளையாட்டு பலரின் வாழ்க்கையை, உயிரை சூறையாடியுள்ளதை நாம் தினசரி நாளிதழ்களிலும், செய்திகளிலும் கேட்டு கொண்டு தான் இருக்கிறோம். இந்த ரம்மி விளையாடி பலரும் பணத்தை இழந்து கடன் பட்டு அதில் இருந்து மீள முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதனால் இந்த விளையாட்டை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என பல தரப்பில் இருந்தும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களும் வற்புறுத்தி வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. தமிழக அரசும் இது சார்ந்த அவசர சட்டத்தை அமல் படுத்தியது. அப்படி இருக்கையில் இது போன்ற சூதாட்ட விளையாட்டுகளின் விளம்பரங்களுக்கு நடிகர்கள் நடித்து வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.  


காலாவதியான மசோதா :


சூதாட்டத்தில் ஈடுபடுவோருக்கு சிறை தண்டனையும் 5000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் அல்லது மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என அதற்கான மசோதாவில் தீர்மானிக்கப்பட்டது. இந்த மசோதாவை ஆளுநர் என்.ஆர். ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டதால் அந்த மசோதா சில தினங்களுக்கு முன்னர் காலாவதி ஆனது. இதனால் கடும் கோபத்தில் இருந்த மக்கள் மீண்டும் அரசிடம் தடை செய்ய கோரிக்கைகளை முன் வைத்து வருகிறார்கள். அது மட்டுமின்றி ரம்மி போன்ற சூதாட்ட விளையாட்டு விளம்பரங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளையும் தாறுமாறாக கலாய்த்து ட்ரோல் செய்து வருகிறார்கள். 


அதிர்ச்சியடைந்த சரத்குமார் :


அந்த வகையில் பெரும் அளவில் இந்த ட்ரோல்களால் பாதிக்கப்பட்டது நடிகர் சரத்குமார் தான். சோசியல் மீடியாவில் அவருக்கு ட்ரோல் நாயகன் என்ற பட்டத்தை சூட்டி மிகவும் பங்கம் செய்து வருகிறார்கள். இந்த சமயத்தில் தான் நடிகர் சரத்குமார் 'பொன்னியின் செல்வன் 2' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவிற்கு சென்ற போது அந்த கூட்டத்தில் இருந்த ஒருவர் ரம்மி நாயகன் என பலமாக கத்தியுள்ளார்.


 






இது நடிகர் சரத்துக்குமாருக்கு அதிர்ச்சியை கொடுத்தது என்பது அவரது முகத்திலேயே தெரிந்தது. பலரும் இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்து வருவதால் இது சோசியல் மீடியாவில் ஒரு பேசு பொருளாக மாறியுள்ளது.