ஐபிஎல் தொடரின் 16வது சீசனின் மூன்றாவது போட்டியில் லக்னே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதிக் கொள்கின்றன. இந்த போட்டி லக்னோவில் உள்ள் அட்டல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் வார்னர் பேட்டிங்கை தேர்வு செய்தார். கடந்த ஆண்டு அறிமுகமான லக்னோ அணி டெல்லி அணியுடன் இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் அசத்தலாக வெற்றி பெற்றுள்ளது. டெல்லி அணி லக்னோவுக்கு எதிரான தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முனைப்பில் தங்களது அணியை அமைத்துள்ளது.  


டெல்லி கேப்பிடல்ஸ் அணி 


டேவிட் வார்னர் (கேப்டன்), ப்ரித்வி ஷா, மிட்செல் மார்ஷ், ரிலீ ரோசோவ், சர்ப்ராஸ்கான் (விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவல், அக்சர் படேல், குல்தீப் யாதவ், சேத்தன் சகாரியா, கலீல் அகமது, முகேஷ் குமார்


டெல்லி அணியின் இம்பேக்ட் ப்ளேயர்கள்: 


அமன் ஹக்கிம் கான், மணீஷ் பாண்டே, பிரவீன் துபே, லலித் யாதவ், அபிஷேக் போரல்


லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி


கே.எல். ராகுல் (கேப்டன்), கைல் மேயர்ஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா, க்ருனால் பாண்டியா, நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ஆயுஷ் படோனி, மார்க் வூட், ஜெய்தேவ் உனத்கட், ரவி பிஷ்னோய், அவேஷ் கான்


லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் இம்பேக்ட் ப்ளேயர்கள்: 


பிரேரக் மங்காட், கிருஷ்ணப்பா கவுதம், யாஷ் தாக்கூர், டேனியல் சாம்ஸ், அமித் மிஸ்ரா.