தமிழ் சினிமா உலகில் சிக்ஸ் பேக் எல்லாம் இன்றைய காலகட்டத்தில் தான். ஆனால் அன்றே ஒரு பாடி பில்டர் உடலமைப்பு கொண்டிருந்த நடிகர் சரத்குமார். மிஸ்டர் மெட்ராஸ் பட்டம் பெற்ற இந்த நடிகர் 90'ஸ்களில் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்தவர். தற்போது பொங்கலுக்கு வெளியான 'வாரிசு' திரைப்படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சர்ச்சையில் சிக்கிய 'சூப்பர் ஸ்டார்' வார்த்தை :
விஜய் 'சூப்பர் ஸ்டார்' என அவர் சொல்லிய ஒரு வார்த்தையால் ஏராளமான சர்ச்சையில் சிக்கி அவரைக் கேள்விகளால் துளைத்துவிட்டனர் என்றே சொல்ல வேண்டும். அப்படி ஒரு புறம் சர்ச்சைகளுக்கு பதில் சொல்லி வரும் சரத்குமார் உடன் ஒரு ஜாலியான நேர்காணல் சமீபத்தில் நடைபெற்றது. அந்த சமயத்தில் சினிமா பற்றி அல்லாமல் குடும்பம் சார்ந்த பல புகைப்படங்களை பற்றி பல அனுபவங்களை பகிர்ந்தார்.
ராதிகாவே காரணம் :
அந்த வகையில் நடிகர் சரத்குமாரிடம் அவரின் முதல் மனைவி, குழந்தைகளுடன் எடுக்கப்பட்ட புகைப்படம் பற்றி பேசுகையில் "ஒரு சில குடும்பங்கள் சேரும், ஒரு சில பிரியும். ஆனால் பிரிந்தாலும் ஒன்றாக சேர்ந்து இந்த குடும்பத்தை பிடித்து வைத்துள்ளார் எனது மனைவி ராதிகா. என்னுடைய முதல் தாரத்து குழந்தைகள் வரலக்ஷ்மி மற்றும் பூஜா இருவரையும் எந்த வேறுபாடும் பார்க்காமல் இன்றும் இறுக்கி பிடித்துள்ளார். அது மட்டுமின்றி வரலட்சுமியின் அம்மாவிற்கு மரியாதை கொடுப்பதில் இருந்து எந்த ஒரு குறையும் ராதிகா வைத்ததில்லை" என்றார்.
வரலக்ஷ்மி சினிமாவுக்கு வந்தது எப்படி :
வரலக்ஷ்மி எந்த ஒரு காரியம் செய்தாலும் அப்பாவை கேட்டு செய் என அவருடைய அம்மா கூறியுள்ளார். அந்த சமயத்தில் வரலக்ஷ்மி என்னிடம் சினிமாவில் நடிக்க வேண்டும் என ஆசை படுகிறேன் என கேட்டபோது நான் அதை மறுத்தேன். ஆனால் வருவின் அம்மா - ராதிகா இருவருமே ஒன்றாக ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்து ஏன் வரு சினிமாவில் நடிச்சா என்ன என கேட்கும் அளவிற்கு ராதிகா குடும்பத்தை ஒட்ட வைத்துள்ளார். இருவருக்கும் இடையிலும் நல்ல ஒரு மரியாதையான உறவை தக்கவைத்து கொண்டதற்கு முக்கியமான காரணம் ராதிகா தான் " என்றார் நடிகர் சரத்குமார்.