ஆர்மீனியா இராணுவப் பிரிவின் தொழிற்சாலையில் நேற்று இரவில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 படைவீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும்,மூன்று பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
"முதற்கட்ட தகவல்களின்படி, இராணுவப் பிரிவின் இன்ஜினீயரிங் மற்றும் துப்பாக்கி சுடும் நிறுவனத்தின் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 வீரர்கள் இறந்துள்ளனர். மேலும் மூன்று ராணுவ வீரர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது" என்றும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமைச்சகத்தின் கூற்றுப்படி, ஆர்மீனியாவின் கிழக்கு கெகர்குனிக் பிராந்தியத்தில் உள்ள அசாட் கிராமத்தில் வியாழக்கிழமை அதிகாலை 01.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
தீ விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் அந்த ஆறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தீ விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.