பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சரத்குமார் மற்றும் பிரபு உள்ளிட்ட பிரபலங்கள்  புறக்கணிக்கப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் போஸ்டர், டீசர் உள்ளிட்டவை வெளியாகி மக்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் படத்தில் இருந்து  ‘பொன்னி நதி’ பாடல் வெளியிடப்பட்டது. தொடர்ந்து  ‘சோழா சோழா’ பாடல் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியிடும் விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. 


 


 






இந்த நிகழ்ச்சியில் தமிழ் திரையுலக ஜாம்பாவன்களான நடிகர்கள் ரஜினி, கமல் கலந்து கொண்டு ட்ரெய்லரை வெளியிட்டனர். இவர்களுடன் படத்தில் நடித்திருக்கும் முக்கிய நட்சத்திரங்களான கார்த்தி (வந்தியத்தேவன்), ஜெயம் ரவி (பொன்னியின் செல்வன்) ஐஸ்வர்யாராய் ( நந்தினி), த்ரிஷா (குந்தவை), விக்ரம் (ஆதித்ய கரிகாலன்), சரத்குமார், பிரபு (பெரிய வேளார் பூதி விக்கிரம கேசரி) உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். விழா 6 மணிக்கு தொடங்கப்படும் என சொல்லப்பட்ட நிலையில், நிகழ்ச்சி நிரலுக்கு பிரபலங்கள் வர தாமதம் ஆனதால் நிகழ்ச்சி தொடங்கவே 7.38 மணியாகிவிட்டது. இசை வெளியீடு விழா என்பதால் படத்தில் இடம்பெற்ற 6 பாடல்களையும் பாடகர்கள் பாடினர்.  


 






இதற்கிடையே பிரபலங்களையும் பேசும் படி அழைத்தனர். ஜெயமோகன் தொடங்கி பார்த்திபன் என பலரும் பேசி முடிக்கவே தாமதம் ஆகிவிட்டது. முன்னதாக ரஜினி நிகழ்ச்சிக்கு வந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் 8.30 மணியளவிலேயே நிகழ்ச்சிக்கு வந்தார். ட்ரெய்லரும் அப்போது வரை வெளியிடப்படவில்லை. இதனால் மேடையேறிய பலரும் ரத்தின சுருக்கமாக தங்களது பேச்சை முடித்துக்கொண்டனர். படத்திற்கு பாடல்கள் எழுதிய இளங்கோ கிருஷ்ணன் வரை மேடையேற்றப்பட்ட கெளரவிக்கப்பட்ட நிலையில் நடிகர்கள் சரத்குமார், பிரபு ஆகியோர் மேடையேற்றப்படவில்லை. இவர்களுடன் ரஹ்மான், விக்ரம் பிரபு உள்ளிட்ட இதர கலைஞர்களும் மேடையேற்றப்பட்டவில்லை. இரவு 10 மணிக்கு மேல் ஆகிவிட்டது.. 




ஆனாலும் அவர்களுக்கு மேடையில் ஏறி பேசுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்ட வில்லை. வாய்ப்பு வழங்கப்படாததின் வருத்தம் சரத்குமாரின் முகத்தில் நன்றாகவே தெரிந்தது. அவர் இறுதியில் கொஞ்சம் இறுக்கமாகவே காணப்பட்டார். இறுதியில் மொத்தமாக மேடையேறும் போது, நடிகர் பிரபு அது பற்றி ஏதும் கண்டுகொள்ளாது போல் மணிரத்னத்தின் தோளை உலுக்கினாலும், கிளம்பலாம் என்று சரத்குமார் சொன்னத்தில் காட்டம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. என்ன இருந்தாலும் ஒரு மரியாதைக்காகவாவது அவர்களை மேடையேற்றியிருக்கலாம் என்று திரை வட்டாரங்கள் பேசிக்கொள்கிறார்கள்