தமிழ் சினிமாவிலன் தவிர்க்க முடியாத இயக்குநர்களுள் ஒருவராக இருப்பவர் சந்தோஷ் நாராயணன். இவர்  தனது பிறந்த நாளை இன்று (மே15 ) கொண்டாடி வருகிறார்.இசையை  உயிருடன் இணைக்கும் வெகு சில கலைஞர்கள் இவரும் ஒருவர். அதனை தான் எங்கிருந்து கற்றுக்கொண்டேன். தனக்கு பிடித்த இசைக்கலைஞர்கள் யார் என்பது குறித்து நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருக்கிறார். 


 






 


அதில் "நான் எலெக்ட்ரானிக் இசையமைப்பாளரா இருந்தேன்.எனக்கு கானா அப்படினா என்னதுனே தெரியாது. பாடல் இருக்கு அப்படினு தெரியும் ஆனால் அவர்களுடைய வாழ்க்கை முறை என்னதுனே தெரியாது. ரஞ்சித்  எனக்கு அட்டக்கத்தி படம் பண்ணும் பொழுது எலெக்ரானிக் இடை இருக்கக்கூடாதுனு சொன்னாரு. சமுதாய பிரச்சனைகள் குறித்து என்னால சிந்திக்க கூட நேரமில்லை. நான் ரொம்ப கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த காலக்கட்டம் என்பதால  என்னுடைய தேவையை நோக்கிதான் ஓடிக்கொண்டிருந்தேன். ஆனால் ரஞ்சித் என் கண்ணை திறந்துவிட்டார். அவராலத்தான் நான் லைவ்வா, உணர்வு சார்ந்த இசையை உருவாக்க ஆரமித்தேன். அவர்தான் என்னை டியூன் பண்ணிவிட்டார். நான் ஒரு ஆல்பம் பாடலை உருவாக்கி ரஹ்மான் சாருக்கு அனுப்பினேன். அவர் அதை பார்த்து பாராட்டினார். அதன் பிறகு  நான் திமிரா நடந்து வந்தேன், நான் ஹாப்பியா சுற்றினேன்.


ஒரு கடையில போய் பரோட்டா சாப்பிட்டேன் . வீட்டுக்கு போயிட்டு படம் பார்த்தேன் நல்லா ஞாபகம் இருக்கு. 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் , இன்றைக்கும் நியாபகம் இருக்கு. நான் வியந்து பார்க்கும் ஒரு இசையமைப்பாளர் பாராட்டும் பொழுது இன்ஸ்பிரேஷனாக இருந்தது. இசையை உருவாக்கும் பொழுது மதிப்பில்லாமல் போய்விடக்கூடாது என்பதுதான் என் விருப்பம் . எப்போது யாரு கேட்டாலும் நம்மை திட்டக்கூடாது இல்லையா. எம்.எஸ்.விஸ்வநாதன் சார், அவர் பாடல் உணர்வோடு கலந்துவிடும். இளையராஜா , அவர் பண்ண பாடல்கள் அந்த காலக்கட்டத்துல யாருமே பண்ணது இல்லை. அடுத்தாக ஏ.ஆர்.ரஹ்மான் அவர் கிட்ட  எனக்கு அந்த அமைதியும் , அகிம்சை வழியும் பிடிக்கும்.அவருடைய சவுண்ட்ஸ் எல்லாம் வேற லெவல் . இந்த மூன்று பேர்தான் நான் சினிமாவில் ரொம்ப‌ மதிக்கும் ஆட்கள்" என தெரிவித்திருந்தார் சந்தோஷ் நாராயணன்.