லொள்ளு சபா மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரைக்குள் நுழைந்தவர் சந்தானம். கோலிவுட்டில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர். மேலும் டாப் நடிகர்கள் பலருடன் காமெடியனாக நடித்திருக்கிறார். இவரது நகைச்சுவை ஸ்டைல் கவுண்டமணியை நினைவுப்படுத்தினாலும் இவருக்கென்று தனி ரசிகர் கூட்டம் உண்டு.


சில காரணங்களால் வடிவேலு சினிமாவில் நடிப்பதிலிருந்து பிரேக் எடுக்க சந்தானம் அசுர வேகத்தில் வளர்ந்தார். ஆனால் திடீரென ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். அவர் ஹீரோவாக நடித்த படங்கள் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளன. 


சமீபத்தில் அவர் ஹீரோவாக நடித்த சபாபதி, டிக்கிலோனா உள்ளிட்ட படங்களும் கலவையான விமர்சனங்களையே பெற்றன. அதேசமயம் சந்தானம் மீண்டும் காமெடியனாக நடிக்க வேண்டுமென்பதே அவரது ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. 


 






இந்நிலையில் சந்தானம் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அதன்படி அவர் கர்நாடக இயக்குநர் பிரசாந்த் ராஜு இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் பணியாற்றுபவர்கள் குறித்த விவரம் விரைவில் வெளியிடப்படுமென தெரிகிறது. 


இதுகுறித்த அறிவிப்பை சந்தானம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டு தனது முதல் படமான ‘லவ் குரு’ படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான ஃபிலிம் ஃபேர் விருதை பிரசாந்த் பெற்றிருக்கிறார்.


அதுமட்டுமின்றி கர்நாடக அரசின் மாநில விருதுகளை வென்றுள்ள இயக்குநர் பிரசாந்த் ராஜ், இதுவரை பெரும்பாலும் நகைச்சுவைத் திரைப்படங்களையே இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: Rajinikanth | ஒரு அவித்த முட்டை கேட்ட ரஜினி... அவமானப்படுத்திய சர்வர்... 17 ஆண்டுகளுக்குப் பின் திருப்பிக் கொடுத்த மாஸ் சம்பவம்!


Anjana Rangan Corona: அறிகுறியே தெரியல..ரொம்ப பயமா இருக்கு.. பிரபல தொகுப்பாளினி அஞ்சனாவுக்கு கொரோனா..!