தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் உலகநாயகன் கமலஹாசன். இவருக்கு ஸ்ருதிஹாசன், அக்ஷரா ஹாசன் என்ற இரு மகள்கள் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. இதில் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் அவர்கள் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘7 ஆம் அறிவு’ படத்தின் மூலம் ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். ஆனால், அதற்கு முன்பு சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் ஸ்ருதி ஹாசன். தனது 6 வயதில் கமல் நடிப்பில் வெளியான தேவர் மகன் படத்தில் ஒரு பாடலை கூட பாடியுள்ளார் . மேலும், 7 ஆம் அறிவு படத்திற்கு பின்னர் பல்வேறு படங்களில் ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார். அதோடு இவர் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து உள்ளார். இறுதியாக சூர்யா நடிப்பில் வெளியாகி இருந்த சிங்கம் 3 படத்தில் ஸ்ருதி ஹாசன் நடித்திருந்தார். அதன் பின்னர் அம்மணியை வேறு எந்த தமிழ் படத்திலும் காண முடியவில்லை. அதோடு ஸ்ருதிஹாசன் நடிப்பை தவிர இசையிலும் தீவிர ஆர்வம் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதனிடையே நடிகை ஸ்ருதி ஹாசன் லண்டனை சேர்ந்த இசைக்கலைஞர் மைக்கல் கார்சலை காதலித்து வந்தார். ஸ்ருதி ஹாசன் தன் காதலனை அப்பா கமல்ஹாசனிடம் ஒரு திருமணம் விழாவில் அறிமுகம் செய்து கூட வைத்தார். அதுமட்டும் இல்லாமல் இருவரும் திருமணம் செய்துள்ளதாக கூறப்பட்டது. ஆனால், ஸ்ருதி ஹாசன் அதனை மறுத்தார். பின் இருவரும் காதலை முறித்துக்கொண்டதாக ஸ்ருதி ஹாசன் அறிவித்தார்.
ஸ்ருதி ஹாசனை பிரிந்த மைக்கேல் வேறு ஒரு பெண்ணுடன் காதலில் விழுந்தார். ஆனால், காதலை பிரிந்த ஸ்ருதி சிறிது காலம் மன அழுத்தத்தில் இருந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ஸ்ருதி ஹாசன் அடிக்கடி ஒரு ஆணுடன் இருக்கும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வந்தார். பின் ஸ்ருதி ஹாசன், சாந்தனு ஹசாரிக்காவை காதலிப்பதாக தெரிவித்தார். அதோடு அவருடன் ஸ்ருதி ஹாசன் ஒன்றாக வசித்து வருகிறார். கடந்த ஆண்டு தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகை முதல் சமீபத்தில் சென்ற புத்தாண்டு வரை அவருடன் தான் ஸ்ருதி கொண்டாடி இருந்தார். இப்படி ஸ்ருதிஹாசன் சாந்தனு என்பவரை காதலித்து வருவது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. இவர் மும்பையை சேர்ந்தவர். அதோடு இவர் பிரபல டூடுல் கலைஞர் ஆவார். இந்த நிலையில் திருமணம் குறித்து சாந்தனுவிடம் பயனர் ஒருவர் கேள்வி கேட்டபோது அவர் ஒரு சுவாரஸ்யமான பதிலை அளித்துள்ளார்.
தற்போது அது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அவர் பேசுகையில், "நாங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்கிறோம். கலை, இசை என பல வழிகளிலும் செல்வாக்கு செலுத்துதல் மற்றும் ஆடைகளை வடிவமைத்தல் போன்ற பல ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறோம். எனவே இது எங்கள் இருவருக்கும் ஒரு ஆக்கபூர்வமான பயணமாகும். நாங்கள் இருவரும் படைப்பு குறித்து உரையாடுகிறோம். இது உண்மையில் ஊக்கம் அளிப்பதோடு முன்னோக்கி செல்ல உதவுகிறது. நான் எப்போதும் ஸ்ருதிஹசனால் ஈர்க்கப்பட்டதைப் போல, அவரும் என்னால் ஈர்க்கப்பட்டு இருக்கிறார். இது தான் எங்களுக்குள் இருக்கும் உறவு. ஸ்ருதி என்னை பல வழிகளில் ஊக்கப்படுத்தியுள்ளார்.
நாங்க ரொம்ப உற்சாகமான கப்புல். நம் வாழ்வில் ஒவ்வொரு ஐடியாவையும் நாம் ஒருவர் மற்றவரிடம் இருந்துதான் எடுக்கிறோம். அப்படி எனக்கு வாய்த்த துணை, என்னைப்போலவே க்ரியேட்டிவான ஐடியாக்களை கொண்டிருப்பது எனக்கு ஆச்சர்யமாகவும் சந்தோஷமாகவும் உள்ளது. ஒவ்வொரு நாளும், நான் பலவிதமான யோசனைகள், எண்ணங்கள் மற்றும் முன்னெடுப்புகளுடன் வருகிறேன், அது என் துணைக்கும் நன்றாகவே புரிகிறது. நான் பல விஷயங்களை விளக்கும் முன்பாகவே புரிந்துகொள்கிறார். என்னுடைய துணையுடன் நான் இந்த வகையான பிணைப்பைக் கொண்டிருப்பது ஒரு கலைஞராக எனக்கு மிகவும் ஊக்கமளிக்கிறது. கொரோனா வந்தபோது லாக்டவுன் காலம் எங்களை மிகவும் பொறுமையாக மாற்றியுள்ளது. அதே நேரத்தில், இப்போது, ஒரு வித்தியாசமான புரிதலும் ஏற்பட்டு உள்ளது. ஒரு பொதுவான இடத்தை இணையர் பகிரும்போது மட்டுமே அதை உருவாக்க முடியும் என்று நினைக்கிறேன். படைப்பாக்க ரீதியில் பார்த்தால் நாங்கள் ஏற்கனவே திருமணம் செய்து கொண்டோம். எங்கள் படைப்புகள்தான் எங்கள் திருமணம். எங்கள் பிணைப்பு எவ்வளவு வலுவானது என்பதை எங்கள் படைப்புகள் நிர்ணயிக்கின்றன. நாங்கள் இருவரும் ஒன்றாக ஆக்கப்பூர்வமான விஷயங்களைச் செய்ய விரும்பும் படைப்பாளிகள், அது எங்களுக்கு மிகவும் முக்கியமானது. திருமணம் என்று வரும்போது, அதைப் பற்றி எனக்குத் தெரியாது. காலம்தான் பதில் சொல்லும். பொதுவெளி என்பது எங்கள் தொழிலில் ஒரு பகுதி. மக்களோடு இணைந்திருக்க வேண்டியது எங்கள் கடமை, நாங்கள் செய்யும் விஷயங்களை பற்றி மக்கள் வெவ்வேறு கருத்துகளை கொண்டிருக்கலாம் அது இயல்புதான். இது எங்களுக்குள் உள்ள தனிப்பட்ட விஷயம், நாங்கள் எங்கள் தனிப்பட்ட உறவை தனித்தனியாக வைத்திருக்கிறோம். அந்த புரிதல் எங்களுக்குள் உண்டு." என்று கூறியுள்ளார்.