தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரனான நடிகர் தனுஷிற்கு இந்த ஆண்டு ஒரு சிறப்பான ஆண்டாக அமைந்தது. அவரின் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம், நானே வருவேன் திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் படங்களாக வெற்றி பெற்றதோடு வசூலிலும் சாதனை படைத்தது. அதை தொடர்ந்து அடுத்தடுத்து மிகவும் பிஸியாக பல படங்களில் நடித்து வருகிறார் நடிகர் தனுஷ். டாப் 10 இந்திய நடிகர்களில் முதலிடத்தை பிடித்துள்ளார் நடிகர் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது. 


 



 


தனுஷின் இரண்டாவது தெலுங்கு படம் :


தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி வரும் 'வாத்தி' திரைப்படம் பிப்ரவரி மாதம் 17ம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களோடு சேர்த்து மூன்றாவதாக தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நடிகர் தனுஷ்.


 






சேகர் கம்முலா இயக்கத்தில் மிகவும் பிரமாண்டமாக உருவாக இருக்கும் தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளார் நடிகர் தனுஷ். அவர் தெலுங்கில் நடிக்கும் இரண்டாவது படம் இதுவாகும். சமீபத்தில் தான் ஐதராபாத்தில் இப்படத்தின் பூஜை மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த படத்தில் நடிகர் தனுஷுடன் இணைந்து நடிக்க பாலிவுட் நடிகர் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்த பட்டுள்ளது என்பது தான் தற்போதைய ஹாட் நியூஸ்.


 






 


இணையும் பாலிவுட் நடிகர் இவரா ?


கேஜிஎஃப் 2 திரைப்படத்தில், யாத்ரா என்ற கதாபாத்திரத்தில் மிரட்டலாக நடித்த சஞ்சய் தத் தான் அந்த பாலிவுட் பிரபலம். முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சஞ்சய் தத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிக்க அவர் 10 கோடி வரை சம்பளமாக கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.