பாலிவுட்டின் பிரபல நடிகரான ஷாஹித் கபூரின் தங்கை திருமணம்  மும்பையில் கோலாகலமாக நடைப்பெற்றது.  ஷாஹித் கபூரின் தங்கையான  சனா கபூரை பிரபல நடிகர்களான மனோஜ் பஹ்வா-சீமா பஹ்வாவின் மகன் மயங்க் பஹ்வா கரம் பிடித்துள்ளார். இவர்களின் திருமணம்  கடந்த புதன் கிழமை மும்பையில் உள்ள மகாபாலேஷ்வர் என்னும் இடத்தில் நடைப்பெற்றது. திரைத்துறையில் நெருக்கமானவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே திருமணத்தில் பங்கேற்றனர்.


 






 



இது குறித்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த நடிகர் ஷாஹித் கபூர்  “காலம் எவ்வளவு வேகமாக பறக்கிறது. சிறிய பிட்டோவாக இருந்தவள்  இப்போது ஒரு மணமகள். என் பேபி சிஸ்டர் சீக்கிரமா வளந்துட்டா.  இது அவளின் ஒரு அற்புதமான புதிய அத்தியாயத்திற்கு உணர்ச்சிபூர்வமான ஒரு  ஆரம்பம். அன்புள்ள சனா கபூர் நீயும் மயங்கும் எப்போதும் சூரிய ஒளிபோல பிரகாசமாக இருக்கனும். உங்களுக்கு நல்ல வைஃப்ஸ் மட்டுமே கிடைக்கனும் “ என வாழ்த்தியுள்ளார்.


 







சனாவின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது மற்றும் மெஹந்தி விழாவின் படங்கள் மற்றும் வீடியோக்கள் ஏற்கனவே சமூக ஊடகங்களில் வைரலானதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சில புகைப்படங்களை கீழே காணலாம்.