தென்னிந்திய சினிமா மட்டுமன்றி இந்திய அளவில் பிரபலமான ஒரு நடிகையாக அறியப்படுபவர் சமந்தா. மிகவும் பிஸியாக படங்களில் தொடர்ந்து நடித்து வந்த சமந்தா ஃபிட்னஸ் ஆக்டிவிட்டிகளிலும் கடுமையாக ஈடுபட்டு வந்தார். அப்படியான ஒரு சூழலில் தான் மயோசிடிஸ் எனும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து விலகி மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 


தொடர் சிகிச்சைக்கு பிறகும் தேவையான ஓய்வு எடுத்து கொண்ட பிறகும்  உடல் நிலை சற்று தேறிய பிறகு மீண்டும் சகஜமாக தனது பணியைத் தொடங்கினார் சமந்தா. சாகுந்தலம், விஜய் தேவரகொண்டா உடன் குஷி  மற்றும் வருண் தவானுடன் இணைந்து சிட்டாடல் இணைய தொடர் என நடித்து வந்தார். 


 



முன்னதாக இவர் நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என இந்து மொழிகளில் வெளியான குஷி திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் வெற்றி பெற்றுள்ளது. 


தற்போது சினிமாவில் இருந்து சிறுது காலம் பிரேக் எடுத்துக்கொண்டு மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா மற்றும் தென் கொரியா நாடுகளுக்கு செல்ல உள்ளார் சமந்தா என்று தகவல் வெளியாகியுள்ளது. சிகிச்சை மேற்கொள்ளும் சமந்தா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, தனது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக பூஸ்டர் சிகிச்சை மேற்கொள்ளவதால் ஏற்படும் நன்மைகள் குறித்த ஒரு குறிப்பையும் பகிர்ந்துள்ளார். 


“நோய் எதிர்ப்பு சக்தி பூஸ்டர் பயன்படுத்துவதால் ரத்தத்தில் வெள்ளை அணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும், நோய் எதிர்ப்பு சக்தியின் திறன் மேம்படும், தசைகள் மற்றும் எலும்புகளை வலுவாக்கும், இதய அமைப்பை மேம்படுத்தி செயல்பாட்டை அதிகரிக்கும், வைரஸ் மற்றும் இதர நோய்களின் தாக்கத்தை எதிர்த்துப் போராடும்" என தனது பதிவில் பூஸ்டரின் நன்மைகளை பதிவிட்டுள்ளார். 


மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் சமந்தா பகிர்ந்துள்ள இந்த விழிப்புணர்வு பதிவு அவரது ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. 


தசை அழற்சி பாதிப்புக்காக மேல் சிகிச்சைக்கு வெளிநாடு சென்றுள்ள சமந்தா விரைவில் குணமடைந்து மீண்டும் முழு எனர்ஜியுடன் திரைப்படங்களில் கம்பேக் கொடுக்க வேண்டும் என அவருக்காக பிரார்த்தனை செய்கிறார்கள் சமந்தாவின் தீவிர ரசிகர்கள்.