மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள குஷி திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில், குஷி படத்தின் இரண்டு நாள் வசூல் நிலவரத்தைப் பார்க்கலாம்.


குஷி


சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா இரண்டாவது முறையாக இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் குஷி. ஷிவ நிர்வாணா இப்படத்தை இயக்கியுள்ளார். சச்சின் கெதெக்கர், ராகுல் ராமகிருஷ்ணா உள்ளிட்டோர் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மலையாள இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.


காஷ்மீரில் அரசு வேலை வாய்ப்பு கிடைத்த விப்லவ் (விஜய தேவரகொண்டா) ஆராத்யாவை (சமந்தா) சந்திக்கிறார். முதல் சந்திப்பிலேயே காதலில் விழும் கதாநாயகன் எப்படியோ கதாநாயகியை காதலில் விழவைக்க, விப்லவ்- ஆராத்யாவின் பெற்றோருடைய நம்பிக்கை எதிர் எதிர் துருவங்களாக இருப்பது திருமணத்திற்கு முட்டுக்கட்டையாக நிற்கிறது.


அதை எதிர்த்து இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொள்கின்றனர். திருமண வாழ்க்கையின் ஆரம்ப காலகட்டத்தில் இனிதாகப் போனாலும், போகப்போக இவர்களுக்குள் வரும் சண்டை இல்லற வாழ்வை கசப்பாக்குகிறது. இவர்களுக்குள் ஏன் சண்டை வருகிறது? சண்டைக்குப் பின் இவர்கள் எப்படி சேர்கிறார்கள் என்பதே படத்தின் மீதிக் கதை.


முதல் நாள் வசூல்






தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான குஷி திரைப்படம் முதல் நாள் உலக அளவில் ரூ.30.1 கோடி வசூல் செய்ததாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தகவல் வெளியிட்டது. இந்திய அளவில் முதல் நாளில் மட்டும் ரூ 15.25 கோடிகளை குஷி வசூல் செய்துள்ளது.


 






முதல் இரண்டு நாட்களில் உலகளவில் மொத்தம் ரூ.51 கோடிகளை இப்படம் வசூல் செய்த நிலையில், தற்போது மூன்றாவது நாளையும் சேர்த்து மொத்தம் ரூ.70.23 கோடிகளை வசூல் செய்துள்ளது என அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்டுள்ளது படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி.