சிறிய இடைவெளிக்குப் பின் நடிகை சமந்தா தனது சமூக வலைதளப் பக்கத்தில் மிக உற்சாகமாக காணப்படுகிறார். தனது வாழ்க்கை நடவடிக்கைகளை, நிகழ்வுகளை புகைப்படங்களாக தனது வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் சமந்தா. இந்த ஃபோட்டோ சீரிஸை சமந்தா தனது 16 வயது புகைப்படத்தில் இருந்து தொடங்கி அதற்கு அடுத்ததாக அவரது செல்ல வளர்ப்பு நாய்களான ஹாஷ் மற்றும் ஷாஷாவின் புகைப்படங்களை பகிர்ந்தார். அடுத்ததாக அவர் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம். இவற்றிற்கு பின்பு  அதிகாலை உடற்பயிற்சிக்காக செய்யும் குதிரை சவாரியில் இருந்து தொடங்கி காலை உணவு, தான் நடித்து வரும் விளம்பரம் ஒன்றின் படப்பிடிப்பு தளம், மற்றும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார். இந்த ஃபோடோ சீரிஸின் இறுதி வாசகமாக புகழ்பெற்ற வங்க கவியான ரவிந்திர நாத் தாகூரின் வரிகளையும் சேர்த்து பதிவிட்டுள்ளார்.


தன்னுடைய தற்போதைய நிலையிலிருந்து விரைவில் குணமடைவேன் என்று அவர் தெரிவித்துள்ளார். இதனைப்பார்த்த அவரது ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைந்து வருவார் என அவருக்கு தங்களுடைய ஆதரவை தெரிவித்துள்ளனர்.


நடிகை சமந்தா, கணவர் நாகசைதன்யாவுடனான திருமண உறவை முடித்துக்கொள்வதாக கடந்த 2021 ஆம் ஆண்டு தெரிவித்தார். இத்தகைய ஒரு முடிவை எடுப்பது அவரருக்கு அவ்வளவு எளிதானதாக இருந்திருக்காது. இந்த நிலையில் அவருக்கு மையோசிடிஸ் என்கிற நோய் இருப்பதாக தகவல் வந்தது. சில மாதங்களுக்கு முன்பு நடிகை சமந்தா தனக்கு மையோசிடிஸ் என்கிற நோய் எதிர்ப்புத்திறன்  பாதிப்பு இருப்பதாக தனது சமுக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார். முதலில் தனது யசோதா திரைப்படத்தின் ட்ரெய்லருக்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்த சமந்தா. “வாழ்க்கை எல்லாருக்கும் அத்தனை எளிதாக இருப்பதில்லை” என தொடங்கி தனக்கு மையோசிடிஸ் என்னும் நோய் எதிர்ப்புத் திறன் பாதிப்பு இருப்பதாக தெரிவித்தார். இந்த செய்தி அவரது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதனை தொடர்ந்து சமந்தா தனது திரையுலகப் பயணத்தை தொடர்வாரா மாட்டாரா என சமூக வலைதளத்தின் பெரும் விவாதம் எழுந்தது. இத்தகைய சூழலில் சமந்த நடிப்பில் உருவான சாகுந்தலம் படம் வெளியானது. ஆனால் இந்தப் படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை. சமந்தாவின் திரைப்பயணம் இத்துடன் முடிந்துவிட்டது. இப்படியான நிலையைல் அவரால் தொடர்ந்து படத்தில் நடிக்க முடியுமா, அப்படியே நடித்தாலும் அது அனைவரும் பார்த்து ரசித்த அதே கதிஜாவாக இருப்பாரா என்று இப்படியான கேள்விகள் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டன.


இப்போது யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார் நடிகை சமந்தா. மருத்துவர்களின் ஆலோசனைப்படி நடந்தால் தனது இந்த உடல் நிலை விரைவில் குணமடைந்துவிடும் என்றும் இப்படியான ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்க முயற்சிப்பதாகவும் சமந்தா தெரிவித்துள்ளார்.