கடந்த 2017 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்ட நாக சைதன்யாவும் சமந்தாவும் சமீபத்தில் பிரிவதாக அறிவித்தனர். இது அவர்களது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இருவரது பிரிவு குறித்து சில ஊடகங்கள் வதந்திகளை பரப்பின. விவாகரத்து என்பது வலி நிறைந்தது. என்னை அதில் இருந்து வெளியே வர அனுமதியுங்கள் என சமந்தாவும் கோரிக்கை விடுத்திருந்தார். இருப்பினும் வதந்திகள் தொடர்ந்தன. இந்த நிலையில் தன்னைப் பற்றிய வதந்திகள் பரப்பிய சில யூடியூப் பக்கங்கள் மீது சமந்தா அவதூறு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்குகள் தற்போது நடைபெற்று வருகின்றன. சமந்தாவும், நாக சைதன்யாவும் பிரிவதாகக் கூறி வெளியிட்ட பதிவில் இருவரும் நண்பர்களாக தொடர்வோம் என்று குறிப்பிட்டிருந்தனர். பின்னர் அவரது சமூக வலைதளங்களில் இருந்து தனிப்பட்ட முறையில் நாக சைதன்யாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை மட்டும் சமந்தா நீக்கியிருந்தார். நாக சைதன்யாவின் குடும்பத்தினருடன் இருக்கும் படங்கள், நாக சைதன்யா மற்றும் நண்பர்களுடன் இருக்கும் படங்கள் எல்லாம் இன்ஸ்டாகிராமில் இருக்கின்றன. ஆனால் நாக சைதன்யா, சமந்தாவுடன் எடுத்துக்கொண்ட படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கவில்லை.



இந்த நிகழ்வுக்கு பிறகு மனதளவில் தேறிவருவதற்கு முயலும் சமந்தா தனிமையில் அதிகம் இருக்கிறாராம். அம்மாவுடன் அமர்ந்து வெகு நேரம் பேசுகிறாராம். அவர் தற்போது அவர் அம்மா தன்னை பற்றி சொன்னதாக ஒரு இன்ஸ்டாகிராம் ஸ்டோரி ஒன்று பதிவிட்டிருக்கிறார். அதில், "நான் வலிமையானவள், நான் எல்லாவற்றிலிருந்தும் மீளக்கூடியவள், நான் எல்லாவற்றிலும் சரியானவள் இல்லை, ஆனால் என்னளவில் சரியானவள்தான், எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டேன், எப்போதும் அன்புடையவள், குறிக்கோளுடயவள், நான் மனிதி, நான் போராளி" என்று ஆங்கிலத்தில் எழுதி இருந்தது. அதற்கு கீழ் அது அவரது அம்மா சொன்னது என்று எழுதப்பட்டு இருந்தது. விவாகரத்து பெற்ற பிறகு அதன் பாதிப்பில் இருந்து வெளியில் வர முயன்று கொண்டிருக்கும் சமந்தாவிடம் அவரது அம்மா நம்பிக்கை வார்த்தைகள் கூறி தேற்றிக்கொண்டிருக்கிறார் என்பது அவரது ரசிகர்களுக்கும் ஆறுதலை அளித்துள்ளது. 



தன் அம்மா கூறிய வார்த்தைகளை போஸ்டாக இட்டிருந்த சமந்தா இரு நாட்கள் முன்பு பெற்றோர்களுக்கு ஒரு அறிவுரையை வழங்கி இருந்தார். பெண் பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு அறிவுரையும் சொல்லியிருக்கிறார். அதில் உங்கள் மகள் யாரைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்பதைப் பற்றி கவலைப்படுவதை விட்டுவிட்டு, உங்கள் மகளை வலிமையானவளாகத் தயார் செய்யுங்கள். அவளது திருமணத்திற்காகப் பணம் சேர்த்து வைப்பதற்குப் பதிலாக அவளது கல்விக்குச் செலவிடுங்கள். காதல் கணவரான நாக சைதன்யாவை பிரிந்த சமந்தா புதுப்பட வேலையை துவங்கும் முன்பு ரிலாக்ஸ் செய்ய துபாய்க்கு சென்றிருக்கிறார். துபாயில் இருந்து அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார் சமந்தா. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்திருக்கிறார் சமந்தா. மேலும் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். அந்த இரண்டு படங்களுமே தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகவிருக்கிறது.