திருமண முறிவுக்கு பிறகு, நாக சைதன்யாவும் சமந்தாவும் தங்களது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ராம நாயுடு படப்பிடிப்பு தளத்திற்கு   'பங்கராஜூ' படத்திற்காக நாக சைதன்யாவும்,  'யசோதா' படத்திற்காக சமந்தாவும் வந்துள்ளனர்.


ஒரே படப்பிடிப்பு தளத்திற்கு செல்கிறோம் என்பதை முன்னமே தெரிந்து கொண்ட இருவரும், ஒருவரையொருவர் பார்க்காமல் இருப்பதற்கான ஏற்பாடுகளை அவர்களது உதவியாளர்களை விட்டு ஏற்பாடு செய்ய சொன்னதாக சொல்லப்படுகிறது.இதனையடுத்து, அது தொடர்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இதனையடுத்து அவர்கள் தங்களது வேலையை முடித்துவிட்டு ஒருவரையொருவர் கண் கூட பார்க்காமல் சென்றுள்ளனர். 




முன்னதாக, தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் பிரபல தெலுங்கு நடிகரும், நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவும் 7 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இவர்களது திருமணம் கடந்த 2017 ஆம் ஆண்டு பிரமாண்டமாக நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகும் தமிழ், தெலுங்கு என பல படங்களில் நடித்து வந்த சமந்தா அடுத்தடுத்து வெற்றிப் படங்களையும் கொடுத்தார். 


இதனிடையே திடீரென்று சமந்தாவும் நாக சைதன்யாவும் ஒரே நேரத்தில் விவாகரத்து முடிவை தத்தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டனர். இந்த நிலையில் அண்மையில் நடிகர் நாக சைதன்யா  அளித்த பேட்டியொன்று பல்வேறு யூகங்களை உண்டாக்கியது. 




அந்தப் பேட்டியில் நாக சைதன்யா, ’ஒரு திரைப்படத்தில் நான் ஒப்பந்தமாகும் முன் நான் அந்த திரைப்படத்தின் என்னுடைய கேரக்டர், கதை ஆகியவை என்னுடைய குடும்ப கெளரவத்திற்கு பாதிப்பு ஏற்படுமா என்பதை யோசித்து தான் நான் ஒப்புக் கொள்வேன். எனக்கே அந்தக் கதையின் மீது முழு திருப்தி இருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்வேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில், சமந்தா படங்களில் கவர்ச்சி காட்டியதுதான் அவர்களின் பிரிவுக்குக் காரணம் என்ற பேச்சு எழுந்தது.


இதுதான் சமந்தா, நாக சைதன்யாவிடம் பிளவை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்தப் படங்களுக்குப் பின்னர் தான் அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் பெயருக்குப் பின்னால் இருந்த அக்கினேனி என்ற குடும்பப் பெயரை நீக்கினார்.