2021 முடிவுக்கு வருகிறது. கடந்த ஆண்டு முழுவதும் ஆட்டோமொபைல் துறை கடுமையான சவால்களையும், பின்னடைவுகளையும் எதிர்கொண்டது. அதே வேளையில், புதிய கார்களும் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த ஆண்டு SUV ரக கார்கள் வரிசையில் டாடா சஃபாரி, ஹுண்டாய் அல்கசார், டாடா பன்ச் முதலானவை வெளியாகியுள்ளன. வரும் 2022ஆம் ஆண்டு, மேலும் பல்வேறு புதிய SUV ரக கார் மாடல்கள் வெளியாகவிருக்கின்றன. அவற்றுள் டாப் 6 கார்களின் பட்டியல் இங்கு கொடுக்கப்படுகிறது. 


Audi Q7 Facelift



ஆடி Q7 ஃபேஸ்லிஃப்ட் என்று அழைக்கப்படும் இந்த மாடல் பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஆடி நிறுவனம் பி.எஸ் 4 எஞ்சின்களை முற்றிலுமாக நீக்கிவிட்டு, பாதுகாப்பான பி.எஸ் 6 எஞ்சின்களுக்கு மாறி வருகிறது. பெட்ரோலில் இயங்கும் இந்தக் கார், வரும் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகிறது. இந்த மாடல் முழுவதுமாக இந்தியாவில் தயாராகும் மாடல் என்பது இதன் கூடுதல் சிறப்பம்சம். இந்தியாவின் அவுரங்காபாத் நகரத்திலுள்ள ஸ்கோடா தொழிற்சாலையில் இந்த மாடல் தயாரிக்கப்பட்டுள்ளது. 


Skoda Kodiaq Facelift



ஸ்கோடா நிறுவனம் ஸ்கோடா கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் மாடல் மூலமாக மீண்டும் இந்திய சந்தையில் களமிறங்குகிறது. Q7 மாடலைப் போலவே இதிலும் 7 சீட்கள் இருக்கின்றன. பெட்ரோல் எஞ்சின் மாடலான இதில் DSG automatic unit சேர்க்கப்பட்டுள்ளது. Q7 மாடலைப் போலவே, இந்த மாடலும் அதே அவுரங்காபாத் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகிறது.


Toyota Hilux



டொயோட்டா நிறுவனம் ஏற்கனவே ஃபார்ச்சூனர் என்ற மாடலை வெளியிட்டிருக்கும் நிலையில், தற்போது பலராலும் எளிதில் பயன்படுத்தக்கூடிய மாடலான ஹிலக்ஸ் என்ற காரை வெளியிடுகிறது. இந்த மாடல் பரிசோதனை முயற்சியாக இந்தியாவில் பல்வேறு முறை தென்பட்டிருக்கிறது. மேலும், இது வரும் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகும் எனக் கருதப்படுகிறது. டொயோட்டா ஹிலக்ஸ் மாடல் IMV 2 platform அடிப்படையில், ஃபார்ச்சூனர் மாடலை விட கூடுதல் சிறப்பம்சங்களுடன் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த மாடலின் 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு, தானாக இயங்கும் கியர் வசதியும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Mahindra Scorpio



மஹிந்திரா நிறுவனம் XUV700 மாடலை வெளியிடுவதாக ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், 2022ஆம் ஆண்டின் பிற்பகுதியில் புதிய ரக ஸ்கார்பியோ கார் மாடல் வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது. மஹிந்திரா தார் மாடல் கார விட மேலும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் வெளியாகவுள்ள இந்த மாடல், பெட்ரோல், டீசல் ஆகிய இரு வகையான எஞ்சின்களையும் கொண்ட மாடல்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


2022 Maruti Suzuki Vitara Brezza



புதிய 2022 மாருதி சுஸூகி விடாரா ப்ரீஸ்ஸா மாடல் அடுத்தாண்டு வெளியாகவுள்ள இந்த மாடல் பல்வேறு புதிய வடிவமைப்பு வடிவங்களிலும், ப்ரீமியம் சிறப்பம்சங்களுடன் வெளியாகிறது. மேலும் இந்த மாடல் 2022ஆம் ஆண்டின் மத்தியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Maruti Suzuki Jimny



நீண்ட நாள்களாக எதிர்பார்க்கப்பட்ட மாருதி சுஸூகி ஜிம்னி மாடல் 2022ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்போது வெளியாகும் எனத் தெளிவான விவரங்கள் தெரியாத நிலையில், இந்த மாடல் வரும் ஆண்டின் பிற்பகுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினைக் கொண்ட மாடலில் சுஸூகியின் AllGrip 4x4 சிஸ்டம் பொருத்தப்பட்டிருக்கிறது. 


Car loan Information:

Calculate Car Loan EMI