தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா கடந்தாண்டு அக்டோபர் மாதம் தனது காதல் கணவரும், நடிகருமான நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார். திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கும், ரசிகர்களுக்கும் இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சமந்தா கடந்தாண்டு வெளியான புஷ்பா படத்தில் இடம் பெற்ற ஊ சொல்றியா மாமா பாடலின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். இதனால் அவரின் அடுத்தடுத்த படங்கள் மீது ரசிகர்களின் கவனம் குவிந்து வருகிறது.
தமிழில் கடைசியாக விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் “காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்தில் நடித்திருந்தார். தற்போது அவர் நடிப்பில் யசோதா படம் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி படம் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரிஹரிஷ் இயக்கியுள்ள யசோதா படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் விஜய் தேவரகொண்டாவுடன் ‘குஷி’ படத்தில் நடித்து வருகிறார் சமந்தா.
இந்த நிலையில் சமந்தா பற்றி பல தகவல்கள்ச் சமுக வலைதளங்களில் பரவி வருகிறது. அதாவது அவர் அரிய வகை தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அமெரிக்கா சென்று சிகிச்சைப் பெற்று வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால் சமந்தா அமெரிக்கா சென்றது உண்மைதான் என சொல்லப்பட்டுகிறது. அதேசமயம் அவரது உடல்நிலை குறித்த தகவல்கள் வெறும் வதந்தி என அவரது மேனேசர் விளக்கம் அளித்துள்ளார்.
சமந்தா அமெரிக்கா சென்றது உண்மைதான் ஆனால் அவருக்கு தோல் நோய் என்று பரப்பப்படுவது வதந்தி அவர் அமெரிக்கா சென்றதற்கு காரணம் , ஆங்கிலத்தில் வெளியாகி பிரியங்கா சோப்ரா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து வெளியாகிய வெப் சீரிஸ் தான் சிட்டாடெல் இந்த வெப் சீரிஸ் ஆங்கிலத்தில் சற்று பிரபலமான வெப் சிரிஸ் ஏனென்றால் இதன் இயக்குனர்கள் ரஸ்சோ சகோதரர்கள் இவர்கள்தான் அவெஞ்சர்ஸ் போன்ற திரைப்படத்தில் இயக்குனர்கள்.
சிட்டாடெல் வெப்சீரிஸ் இந்திய மொழியில் ரீமேக் செய்ய உள்ளதாகவும் அதை தி ஃபேமிலி மேன் சீரிஸை இயக்கிய ராஜ் மற்றும் டிகே தான் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது அதில் நடிப்பதற்கு தான் சமந்தா அமெரிக்கா சென்றுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
அதுமட்டுமல்லாமல் அந்த வெப் சீரிஸ் ஆக்க்ஷன் திரில்லராக இருப்பதால் உடலை கட்டுக்கோப்பாக வைக்க வேண்டும் என்பதற்காக சமந்தா கடும் முயற்சி எடுத்து வருகிறார் என்ற தகவல்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.