இது குறித்து சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டதாவது, “ இன்று காலை நான் விழித்த போது, சினிமாவில் 12 ஆண்டுகளை முடித்திருப்பதை உணர்ந்தேன். லைட்ஸ், கேமரா, ஆக்ஷன் என வலம் வந்த 12 கால நினைவலைகள் அது. இந்த நினைவலைகள் எதனுடனும் ஒப்பிடமுடியாதவை. ஆசீர்வதிக்கப்பட்ட பயணத்திற்காகவும், விசுவாசம் மிக்க ரசிகர்களை பெற்றதற்காகவும் நான் நன்றியுணர்வுடன் இருக்கிறேன். சினிமாவின் மீதான என் காதல் இன்னும் முடியவில்லை. அது அதிகமாகிக்கொண்டே போகிறது.
கணவருடனான பிரிவுக்கு பிறகு ஆன்மிக சுற்றுலா சென்று, ரிலாக்ஸ் செய்த சமந்தா தனது சினிமா கேரியரின் பக்கம் கவனம் செலுத்தி வருகிறார். இவர் மற்றும் நடிகர் தேவ் மோகன் நடிப்பில் உருவாகியிருக்கும் `சகுந்தலம்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இவைத்தவிர ‘யசோதா’ படத்திலும் நடித்துவருகிறார். இந்த படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்காக கலை இயக்குனர் அசோக் மேற்பார்வையில், முக்கியமான காட்சிகளுக்காக 3 கோடி மதிப்பிலான பிரமாண்ட அரங்கு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அதே போல ‘Arrangements of Love’ நாவலை தழுவி உருவாக்கப்படும் வெப் தொடரிலும் அவர் கமிட் ஆகியுள்ளார். இந்தப்படத்தை ஹாலிவுட் இயக்குனர் பிலிப்ஜான் இயக்குகிறார். பிட்னஸிலும் அதிக கவனம் செலுத்தி வரும் சமந்தா, அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராமில் தான் வொர்க் அவுட் செய்யும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இது மட்டுமன்றி தனது ஸ்டோரி பக்கத்திலும் பிட்னஸ் மோட்டிவேஷன் சார்ந்த தகவல்களை பகிர்ந்து வருகிறார். அப்படி அவர் அண்மையில் பதிவிட்ட பல ஃபிட்னஸ் சமந்தமான வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலானது குறிப்ப்டத்தக்கது.