சமந்தா
டோலிவுட் திரை உலகில் சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவின் மூத்த மகனான நாக சைதன்யாவை, உருகி உருகி காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தா, நான்கே வருடத்தில் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட சமந்தாவுக்கு, திடீர் என உடல் அளவிலும் ஏகப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட்டது. ஒரு வழியாக தனக்கு ஏற்பட்ட அனைத்து பிரச்சினைகளிலும் இருந்து மீண்டு, நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் சமந்தா.
கடைசியாக இவர் சிட்டாடல் வெப் சீரிஸில் நடித்த நிலையில், இந்த சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் அதிகம் கவனம் பெறாமல் போனது. ஃபேமிலி மேன், வெப்சீரிசை போல இந்த வெப் சீரிஸும் தன்னுடைய கேரியருக்கு பலம் சேர்க்கும் என நினைத்த சமந்தா ஆசையில் மண் விழுந்த நிலையில், தற்போது சில பாலிவுட் படங்களில் நடிக்க சமந்தா பேச்சுவார்த்தை ஒரு புறம் நடத்தி கொண்டிருப்பதாகவும், ஹாலிவுட் படம் ஒன்றிலும் இவர் நடிக்க கமிட் ஆகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
அர்ஜுன் கபூருடன் டேட்டிங்
சமந்தாவின் திரை உலக வாழ்க்கை என்னமோ... பிரைட்டாக இருந்தாலும் இவருடைய பர்சனல் வாழ்க்கை தான் கொஞ்சம் டல்லாக சென்று கொண்டிருக்கிறது. ஆனால் சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைத்தாயா விவாகரத்தை அறிவித்த ஒரே வருடத்தில் பாலிவுட் பட நடிகையுடன் டேட்டிங் செய்ய துவங்கி, விரைவில் அவரை திருமணமும் செய்யவும் உள்ளார்.
ஆனால் இதுவரை சமந்தாவின் இரண்டாவது திருமணம் குறித்த இந்த தகவலையும் வெளியாகவில்லை. இந்த நிலையில் தான், நடிகை சமந்தா அஜித்தின், நேர்கொண்ட பார்வை, துணிவு போன்ற படங்களை தயாரித்த போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூருடன் டேட்டிங் செய்து வருகிறாரா? என நெட்டிசன்கள் கேட்டு... புது புரளிக்கு வழி வகுத்துள்ளனர்.
சமந்தாவின் போஸ்ட்
சமந்தா தன்னுடைய instagram பக்கத்தில் கவிதை ஒன்றை எதார்த்தமாக போஸ்ட் செய்திருந்த நிலையில், அதற்கு அர்ஜுன் கபூர் இந்த கவிதை எனது வீட்டின் சுவரில் மாற்றப்பட்டிருக்கிறது என கூற, அதற்கு சம்மு கம்முனு இருக்காமல் தன்னுடைய அன்பின் வெளிப்பாடாக ஹார்டின்ஸ் எமோஜிகளை பறக்க விட, பின்னர் இந்த நெட்டிசன்களுக்கு சொல்லவா வேண்டும்? அர்ஜுன் கபூருடன் டேட்டிங்கா... போனி கபூருக்கு மருமகளாக போறீங்களா? என வாயிக்கு வந்ததை கமெண்டில் போட்டு தாக்கி வருகின்றனர். ஒரு வேலை இது உண்மையா இருக்குமோ... ச்ச ச்ச அப்படி இருக்க வாய்ப்புகள் இல்ல. அவர் தான் தன்னை விட வயது மூத்த நடிகை மலைக்கா அரோராவை பல வருஷமா டேட்டிங் செய்து வருகிறாரே பாஸ். எதுக்கும் என்ன நடக்குதுன்னு கொண்டும் வெயிட் பண்ணி பார்ப்போம்!!